/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ரூ.68 லட்சத்தில் கீழ்மதுரை ஸ்டேஷன் சீரமைப்பு; தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM

மதுரை: கீழ்மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரயிலின் படிக்கட்டிற்கும் நடைமேடைக்கும் 3 அடி அளவிற்கு இடைவெளி உள்ளதால் பெண்கள், முதியவர்கள், பொருட்களை கொண்டு செல்லும் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதை சுட்டிக்காட்டி ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவாவிடம் ம.தி.மு.க., எம்.எல்.ஏ., பூமிநாதன் மனு வழங்கினார்.
இதையடுத்து நடைமேடை உயரத்தை அதிகரிக்கும் வகையில் ரயில்வே துறை சார்பில் ரூ.68 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், பணி விரைவில் தொடங்கப்படும் எனவும் சரத் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார்.