/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கால்வாயில் பள்ளம் தோண்டி மணல் லாரிகளுக்கு தடை
/
கால்வாயில் பள்ளம் தோண்டி மணல் லாரிகளுக்கு தடை
PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM

ஊத்துக்கோட்டை,:ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, சாய்கங்கை கால்வாய் வழியே கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டில், வினாடிக்கு 116 கன அடி வீதம் வரும் கிருஷ்ணா நீர், அங்கிருந்து 25 கி.மீ., தொலைவில் பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது.
இதனிடையே, ஆந்திர மாநிலம், மதனஞ்சேரியில் இருந்து சவுடு மற்றும் கிராவல் மண் ஏற்றி செல்லும் லாரிகள், சாய்கங்கை கால்வாய் மீது சென்று கொண்டிருந்தது. இதனால், சாய்கங்கை கால்வாயின் உறுதித்தன்மை கேள்விக்குறியானது.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மணல் லாரிகள் செல்ல முடியாத வகையில், தமிழக நீர்வள ஆதாரத் துறை சார்பில், சாய்கங்கை கால்வாயில் பள்ளம் தோண்டப்பட்டு, தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

