/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ஊருணியை பாதுகாக்க கலெக்டர் உத்தரவு
/
ஊருணியை பாதுகாக்க கலெக்டர் உத்தரவு
PUBLISHED ON : ஆக 31, 2025 12:00 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊருணிகள்வறண்டு காணப்படுகின்றன. சீமைக் கருவேலமரங்களும், குப்பையும் ஆக்கிரமித்துள்ளதால்ஊருணிகளை மீட்டு நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் ஆக.,27ல் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக ராமநாதபுரம், சக்கரகோட்டையில் உள்ள கீழச்சோத்துாருணியைகலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். அப்போது 'ஊருணியைதுாய்மையாக பராமரித்தால் மழைக்காலத்தில் மழைநீரை அதிகம் சேமிக்க முடியும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊருணிகளை பாதுகாக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீநிகம், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.