/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி சாலையோர பள்ளம் மூடல்
/
தினமலர் செய்தி எதிரொலி சாலையோர பள்ளம் மூடல்
PUBLISHED ON : டிச 02, 2025 05:05 AM

திருப்புவனம்: திருப்புவனம் -- பிரமனுார் ரோட்டில் சாலையோர ஆபத்தான பள்ளத்தை நேற்று அதிகாரிகள் சரி செய்தனர்.
திருப்புவனத்தில் இருந்து புதுார், மாதவன் நகர் வழியாக பிரமனுார், வன்னிகோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு தினசரி பஸ், லாரி, ஆட்டோ, டூவீலர் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மாதவன் நகர் மாணவியர் விடுதி அருகே சாக்கடை கால்வாய் சேதமடைந்து பள்ளம் உருவாகியது.
ஆரம்பத்தில் சிறு பள்ளமாக இருந்த நிலையில் சரி செய்யப்படாததால் தற்போது பெரிய பள்ளமாக மாறியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் இருப்பதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் நேற்று இயந்திரத்தின் உதவியுடன் தற்காலிகமாக பள்ளத்தை மூடிய பின் வளைவில் திரும்பும் இடத்தில் எச்சரிக்கை பலகையும் வைத்தனர்.

