/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
மானாமதி சுகாதார நிலையத்தில் இ.சி.ஜி., வசதி துவக்கம்
/
மானாமதி சுகாதார நிலையத்தில் இ.சி.ஜி., வசதி துவக்கம்
மானாமதி சுகாதார நிலையத்தில் இ.சி.ஜி., வசதி துவக்கம்
மானாமதி சுகாதார நிலையத்தில் இ.சி.ஜி., வசதி துவக்கம்
PUBLISHED ON : ஏப் 11, 2025 12:00 AM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மானாமதி ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் காரணை, ஒரகடம், அருங்குன்றம், திருநிலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இ.சி.ஜி., ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய மருத்துவ வசதிகள் இல்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டினர்.
மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, இ.சி.ஜி., எடுப்பதற்கான கருவியும் இல்லை எனவும் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு இ.சி.ஜி., கருவி வாங்கப்பட்டு, நோயாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.