/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பொன்னேரிக்கரை மேம்பால சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அகற்றம்
/
பொன்னேரிக்கரை மேம்பால சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அகற்றம்
பொன்னேரிக்கரை மேம்பால சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அகற்றம்
பொன்னேரிக்கரை மேம்பால சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அகற்றம்
PUBLISHED ON : ஏப் 27, 2025 12:00 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன.
இந்நிலையில், மேம்பாலத்தின் தடுப்புச்சுவரின் இருபுறமும் அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் ‛போஸ்டர்' ஒட்டி இருந்தனர்.
வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில், மேம்பால சுவரில் இருபுறமும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, ரயில்வே மேம்பால சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் உபகோட்டம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நெடுஞ்சாலைத் துறையினர், பொன்னேரிக்கரை மேம்பாலத்தின் இருபுறமும் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் போஸ்டரை நேற்று அகற்றினர்.