/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சீரமைப்பு; தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஜன 31, 2025 12:00 AM

பரமக்குடி; பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்த நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.
பரமக்குடி நகராட்சி பஸ்ஸ்டாண்ட் எதிரில் 50 ஆண்டுகளைக் கடந்த மேல்நிலைத் தொட்டி உள்ளது. 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி ஒட்டு மொத்தமாக சேதம் அடைந்து கான்கிரீட் துாண் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் தெரியும் வகையில் இருந்தது.
மேலும் தொட்டியை சுத்தம் செய்ய செல்லும் சுருள் படிக்கட்டுகள் தினம் தினம் இடிந்து விழுந்தது. இதனால் ஒவ்வொரு முறையும் பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து தொட்டியை சுத்தம் செய்து வந்த நிலையில் சில மாதங்களாக தொட்டியை சுத்தம் செய்யும் பணிகள் நிறுத்தும் நிலை ஏற்பட்டது.
மேலும் இதன் அருகில் நகராட்சி துாய்மைப் பணியாளர் கிளை அலுவலகம், போலீஸ் பீட் ரூம், கடைகள் என உள்ளது. தொடர்ந்து சேதமடைந்த தொட்டிகளால் ஏற்படும் ஆபத்து குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீரமைப்பு பணிகள் துரிதமாக நடக்கும் நிலையில் புதிதாக இரும்பு பட்டிகள் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் நாட்களில் தொட்டியை சுத்தம் செய்ய ஏதுவாக இருப்பதுடன், விபத்தை தடுக்க வழி வகுக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.