/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ஆவடி பாரதி நகரில் நீடித்த கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு
/
ஆவடி பாரதி நகரில் நீடித்த கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு
ஆவடி பாரதி நகரில் நீடித்த கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு
ஆவடி பாரதி நகரில் நீடித்த கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு
PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM

ஆவடி:ஆவடி மாநகராட்சி, பருத்திப்பட்டு 47வது வார்டு, பாரதி நகர் முதல் குறுக்கு தெருவில் 10 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு குடியிருப்பில் உள்ள ஐந்து வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாலையில் பாய்ந்தோடியது.
இதனால், பகுதிவாசிகள் சாலையில் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் பலமுறை கூறியும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து, சாலையில் தேங்கி கழிவுநீர் ஓடை போன்று காட்சியளித்தது.
இது குறித்து, நம் நாளிதழில் மே 24ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து, பாதாள சாக்கடை இணைப்பிற்கு 19,536 ரூபாய் செலுத்திய அனைவருக்கும், நேற்று முன்தினம் இணைப்பு வழங்கினர்.
இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:
ஒன்றரை ஆண்டுகளாக, சாலையில் கழிவுநீர் தேங்கும் பிரச்னையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானோம். கழிவுநீரால், சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று ஏற்பட்டது.
பாதாள சாக்கடைக்கு பணம் செலுத்த தயாராக இருந்தும், எங்களுக்கு இணைப்பு வழங்கவில்லை. 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியால், எங்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.