/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
திருநின்றவூர் இ.பி., காலனி சாலை சீரமைக்கப்பட்டது 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டிய மாதர் சங்கம்

PUBLISHED ON : ஏப் 16, 2025 12:00 AM

திருநின்றவூர்:திருநின்றவூர் நகராட்சி ஒன்றாவது வார்டில் பெரியார் நகர் சுரங்கப்பாதை அருகே, இ.பி., காலனி சாலை உள்ளது. கடந்த 2008ல் அமைக்கப்பட்ட இச்சாலை, 2014ல் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் இடறி விழுந்து விபத்தில் சிக்கினர்.
குறிப்பாக, சாலை வளைவில், 20 மீட்டர் துாரம் படுமோசமாக இருந்தது. கடந்தாண்டு ஜூலை மாதம், ஸ்கூட்டரில் அவ்வழியாக சென்ற கர்ப்பிணி ஒருவருக்கு, பள்ளத்தில் தவறி விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டது. பகுதிவாசிகள் அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், இ.பி., காலனி சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கடந்த ஆண்டு ஜூலை மாதம், நகராட்சி அதிகாரிகளை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அவர்களே சிமென்ட் கலவையால் சாலையில் சேதமடைந்த பகுதியை சீரமைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள், 15 நாட்களுக்குள் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்தனர். அதன்படி, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால், நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் கடந்தாண்டு தொடர்ந்து செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, இரு தினங்களுக்கு முன், அங்கு புதிதாக சாலை அமைத்துள்ளனர். இதனால், மகிழ்ச்சியடைந்த மாதர் சங்கத்தினர், நன்றி தெரிவிக்கும் விதமாக 'தினமலர்' நாளிதழ் செய்தியை போஸ்டராக்கி அப்பகுதி முழுக்க ஒட்டியுள்ளனர்.