/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு 933 கன அடியாக குறைப்பு - தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஜன 12, 2025 12:00 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு தினமலர் செய்தி எதிரொலியாக வினாடிக்கு 1100 கன அடியில் இருந்து 933 கன அடியாக குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு சாகுபடி மற்றும் குடிநீருக்கு கடந்த சில தினங்களாக தொடர்ந்து வினாடிக்கு 1100 கன அடி திறக்கப்பட்டிருந்தது.
மழையின்றி அணையின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் கூடுதல் நீர் திறப்பால் கம்பம் பள்ளத்தாக்கில் நடந்து வரும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து நீர் திறப்பை குறைக்க வேண்டுமென தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று காலை 6:00 மணிக்கு நீர் திறப்பு 933 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 123.80 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பதிவாகவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 102 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 3380 மில்லியன் கன அடியாகும்.
எனினும் நீர்திறப்பை 600 கன அடியாக குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின்நிலையத்தில் 99 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 84 மெகாவாட்டாக குறைந்தது.