தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: நவ. 17

‘டவுட்’ தனபாலு: நவ. 17

‘டவுட்’ தனபாலு: நவ. 17


PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்., தமிழக முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்: சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் தான் கூட்டணி அமைத்தோம். ஆனால், கூட்டணியில் உள்ளடி வேலைகள் நடந்தன. காங்., நிர்வாகிகள், தி.மு.க.,வுக்காக பணியாற்றினர். அதேநேரம், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எட்டு முக்கிய நிர்வாகிகள், அவர்களின் சொந்த பூத்களில் கூட காங்கிரசுக்கு ஓட்டு வாங்கி தரவில்லை. அதனால் தான், காங்., தோல்வியை சந்தித்தது.

டவுட் தனபாலு: தேர்தலுக்கு முன்னாடி, ‘ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள்’னு தி.மு.க.,வுக்கு உங்க கட்சி கொடுத்த நெருக்கடிகள் கொஞ்சமா, நஞ்சமா...? அதனால தான், 28 தொகுதிகளை உங்களுக்கு வாரி கொடுத்தும், தி.மு.க.,வினரின், ‘உள்ளடி’யால, ஐந்து தொகுதிகள்ல மட்டும் தான் உங்களால கரையேற முடிஞ்சது என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

த.வெ.க., கூட்டணியில் இருக்கும் வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு: அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளேன். இந்த விவகாரத்தில், தி.மு.க., சொல்வது உண்மைக்கு மாறான செய்தி. நானும், வி.சி.க., தலைவர் திருமாவளவனும், இப்போதும் தி.மு.க.,வை நேசிக்கிறோம். ஆனால், தி.மு.க.,வினர் எங்கள் மீது வன்மத்துடன் செயல்படுகின்றனர். தி.மு.க.,வை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

டவுட் தனபாலு: வாராது வந்த மாமணியா உங்க கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைச்சிருக்கு... அது தி.மு.க.,வினர் கண்களை உறுத்துவது, ‘டவுட்’ இல்லாம தெரியுது... ‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்’னு தான், ‘தி.மு.க.,வை நேசிக்கிறோம்’னு வெள்ளைக் கொடி காட்டுறீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!

lll

காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் தவறான அரசியலால், தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரும் தலைகுனிந்து நிற்கின்றனர். உதயநிதியின் ஆதரவு முன்னாள் அமைச்சர்களின் ஊழல் தான், தி.மு.க.,வை தலைகுனிய வைத்துள்ளது. உதயநிதியின் தவறான அரசியலே, தி.மு.க., தோல்விக்கு காரணம். அவர், தி.மு.க.,வின் கடைசி அத்தியாயத்தை எழுதி வருகிறார்.

டவுட் தனபாலு: அது சரி... எல்லா ஆரம்பத்துக்கும் முடிவுன்னு ஒண்ணு இருக்குமே... தி.மு.க., எனும் விதையை விருட்சமாக்கி, ஆலமரமாக்கிய பெருமை, உதயநிதியின் தாத்தா கருணாநிதிக்கு உண்டு... அந்த ஆலமரத்தை அடியோடு சாய்த்து, ‘சாதனை’ படைக்கவே உதயநிதி உழைக்கிறாரோ என்ற, ‘டவுட்’ தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us