PUBLISHED ON : நவ 27, 2026 12:00 AM

பா.ஜ., தமிழக முன்னாள் தலைவரும், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவருமான அண்ணாமலை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உயிரற்ற நிலையில் உள்ளது. அப்படிப்பட்டவர்கள் எங்களுக்கு அரசியல் பாடம் எடுப்பது வெட்கக்கேடு. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தமிழகம் வந்தால், டீ, காபி வாங்கிக் கொடுக்க ஒரு மாநில தலைவர் தேவைப்படுகிறார். தமிழகத்தில் ராகுலின், ‘டிராவல் ஏஜன்ட்’ தான் மாணிக்கம் தாகூர்.
டவுட் தனபாலு: டில்லியில் பேரணி நடத்திய ராகுல், தன் கூடவே நடந்து வந்த கர்நாடக முதல்வரான சிவகுமாரையே பின்னாடி தள்ளிவிட்டு, ‘மரியாதை’ செஞ்சவராச்சே... அப்படி பார்த்தா, தனக்கு டீ, காபி வாங்கிக் கொடுக்கும், ‘தகுதி’யைக்கூட காங்., தமிழக தலைவருக்கு ராகுல் தருவாரா என்பது, ‘டவுட்’ தான்!
lll
பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு: சர்வதேச ஆய்வு மையமான, ‘லோவி இன்ஸ்டிடியூட்’ வெளியிட்ட, ஆசிய கண்டத்தில் சக்தி வாய்ந்த நாடுகளின் தர வரிசை பட்டியலில் நம் நாடு உயர்ந்ததற்கு, பிரதமர் மோடியின் தலைமையே காரணம். 12 ஆண்டுகளுக்கு முன், நாம் தர வரிசையில் பின்தங்கி இருந்தோம். ஆனால், இப்போது பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். நம் தலைமை வலிமையானது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... இந்த மாதிரி சாதனைகளை எல்லாம் பொறுக்க முடியாமல் தான், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஓடிப் போயிடுறாரு... மோடியின் சாதனைகள் தொடர்ந்தால், ராகுல் நிரந்தரமா வெளிநாட்டிலேயே குடியேற வேண்டியது தான் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
தி.மு.க., – எம்.எல்.ஏ., உதயநிதி: த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கி, முதல்வர் விஜய் பெரிய சாதனை போல் பேசினார். நாங்கள் கேட்பதெல்லாம், எங்கே இருக்கிறது அந்த சிங்கப்பெண் சிறப்பு படை என்று தான்! ஒரு கலெக்டருக்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது நடந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறோமா?
டவுட் தனபாலு: அதை விசாரிக்க தான், அரசு ஒரு குழுவை அமைச்சிருக்கே! ஆனா, ‘தினமும் இவ்வளவு கொலைகள், கற்பழிப்புகள்’ என செய்தி வெளியிடும் அளவுக்கு, தி.மு.க., ஆட்சி இருந்தது என்ற விஷயத்தையும், மக்கள் மறக்கலைங்கிறது, இவருக்கு தெரியாதோங்கிற, ‘டவுட்’ வருதே!
lll
