PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழின் உரிமைகளை மட்டுமே ஒற்றை குறிக்கோளாக கொண்டு, பல்வேறு தமிழ் உணர்வாளர்களுடன் இணைந்து, என் பொறுப்பில், ‘தமிழ் மீட்பு இயக்கம்’ துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதல் கூட்டம், கடந்த 22ம் தேதி என் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது. இந்த அமைப்பின் அடுத் தடுத்த செயல்பாடுகள் பின்னர் அறிவிக்கப்படும்.
டவுட் தனபாலு: ‘அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’னு மூணு மாசத்துக்கு முன்னாடி அறிவிச்சீங்க... ‘தைலாபுரம் தோட்டத்துக்கு கட்சியினர் வந்து என்னை பார்த்து பேசலாம்’னும் அறிவிச்சீங்க... ஆனா, ஒருத்தர் கூட எட்டிப் பார்க்காத விரக்தியில, இப்படி ஒரு அமைப்பை துவங்கி, ‘பேச்சு துணை’க்கு ஆள் தேடுறீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: உச்ச நீதிமன்றமே, நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு. உச்ச நீதிமன்றம் வழங்கும் உத்தரவை, எந்த அரசாக இருந்தாலும் நடைமுறைப்படுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்திலும் அதன்படி தான் த.வெ.க., அரசு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத, ‘மாற்றம்’ தான் இங்கு நடந்துள்ளது.
டவுட் தனபாலு: ‘தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுங்க’ன்னு உச்ச நீதிமன்றம் எத்தனையோ முறை உத்தரவு போட்டும், பல நேரங்கள்ல கர்நாடக காங்., அரசு அதை மதிச்சதே இல்லை... அவங்களுடன் கூட்டணியில் இருப்பதால, த.வெ.க., அரசும் உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணிச்சிடுச்சோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
உத்தர பிரதேச மாநிலத்தில் செயல்படும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்: உத்தர பிரதேசத்தில், அடுத்தாண்டு துவக்கத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். ஆனால், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அழுத்தத்தால், 3 கோடி வாக்காளர்களை குறுக்கு வழியில் சேர்க்க, தேர்தல் கமிஷன் முயற்சி செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. பா.ஜ.,வின் சதிக்கு, அதிகாரிகள் துணை போகக்கூடாது.
டவுட் தனபாலு: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துல, பல மாநிலங்கள்லயும், 80 லட்சம் முதல், 1 கோடி வரை வாக்காளர்களை நீக்கிட்டாங்க... ஆனா, உ.பி.,யில் மட்டும் புதுசா, 3 கோடி பேரை சேர்க்கப் போறாங்கன்னு சொல்றது, ‘டவுட்’டை கிளப்புதே...!
lll
