தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: நவ. 18

‘டவுட்’ தனபாலு: நவ. 18

‘டவுட்’ தனபாலு: நவ. 18


PUBLISHED ON : நவ 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: த.வெ.க., ஆட்சியில் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை; பாலியல் வன்கொடுமைகள் பெருகி விட்டன. எந்த பிரச்னை குறித்தும் முதல்வர் விஜய் பேசுவதில்லை. த.வெ.க.,வில் 30 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானம் செய்யவே, முதல்வர் அழைத்து பேசியுள்ளார். விரைவில் இந்த ஆட்சி கலையும்.

டவுட் தனபாலு: த.வெ.க., ஆட்சிக்கு வந்த புதுசுல, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் இப்படித் தான் சாபம் விட்டுட்டு இருந்தாரு... ஆட்சி ஆறு மாசத்தை தாண்டியதை பார்த்துட்டு, அமைதியாகிட்டாரு... இப்ப, நீங்க ஆரம்பிச்சிட்டீங்களா... நீங்க இப்படி பேசப் பேச, த.வெ.க., ஆட்சி அஞ்சு வருஷம் இல்லை... அதையும் தாண்டி நடக்கும் என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ள அழகப்பன், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்தவர். அவர், தீபத்துாணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து, கோவில் ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர். கடவுள் மறுப்பு சிந்தனையுள்ள அவரை, அறங்காவலராக நியமித்தது கண்டிக்கத்தக்கது.

டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சி சரியில்லை என்று தான், த.வெ.க.,விடம் மக்கள் ஆட்சியை கொடுத்திருக்காங்க... ஆனா, கோவில் விவகாரங்களில் த.வெ.க., அரசின் செயல்பாடுகளை பார்க்கிறப்ப, ‘முந்தைய தி.மு.க., அரசில் கூட இப்படி எல்லாம் நடக்கலையே’ என பக்தர்கள் ஆதங்கப்படுவது, ‘டவுட்’ இல்லாம தெரியுது!

lll

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: மேகதாது அணை விவகாரத்தில், தமிழகத்திற்கு எதிராக கர்நாடக முதல்வர் சிவகுமார் தொடர்ந்து பேசி வருவது கண்டனத்துக்கு உரியது. காவிரி நீர் பங்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மேகதாது அணை கட்ட முயற்சி நடக்கிறது. இதில் மத்திய பா.ஜ., அரசும், தமிழகத்திற்கு துரோகம் இழைக்கிறது.

டவுட் தனபாலு: அப்புறம் என்ன... லட்டு மாதிரி ஒரு பிரச்னை கிடைச்சிடுச்சே... ‘வாக்கிங் ஷூ’வை எடுத்து மாட்டிட்டு, மேகதாது அணைக்கு எதிரா காவிரி கரையோரமா ஒரு நடைபயணத்தை துவங்கிட வேண்டியது தானே... ஆனா, உங்க கூட சேர்ந்து நடக்க கட்சியினர் யாரும் இல்லையேன்னு தயங்குறீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us