தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: நவ. 3

‘டவுட்’ தனபாலு: நவ. 3

‘டவுட்’ தனபாலு: நவ. 3

3


PUBLISHED ON : நவ 03, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 03, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ம.க., தலைவர் அன்புமணி: வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 250 அமுதம் மற்றும் கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் அறிமுகம் செய்யப்பட்ட 30 ரூபாய் சன்னரக அரிசி, கடந்த 14 நாட்களில், 115 டன் மட்டுமே விற்பனையாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சற்று மெருகேற்றி, 30 ரூபாய்க்கு விற்பனை செய்வது தான், இந்த திட்டம் தோல்வி அடைந்ததற்கு காரணம்.

டவுட் தனபாலு: அது சரி... இந்த திட்டம் வெற்றி அடைஞ்சிட்டா, 30 ரூபாய் விலையில் மக்களுக்கு சன்னரக அரிசி வினியோகம் பண்றது சிரமமா போயிடும்னு நினைச்ச அதிகாரிகள் தான், இந்த மாதிரி குறுக்கு வழியை கண்டுபிடிச்சிருப்பாங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!

lll

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: ‘கவனக்குறைவாகச் செயல்படுவோர் மீது, பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என, முதல்வர் விஜய் கூறுகிறார். ஐந்து மாதங்களாக மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியும், தன் நிர்வாகத் திறனற்ற செயல்பாட்டால் மின் வாரியத்தை அதலபாதாளத்திற்கு தள்ளிய அமைச்சர் நிர்மல்குமார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

டவுட் தனபாலு: அவ்வளவு பெரிய மின் வாரியத்தை, அஞ்சே மாசத்துல அதல பாதாளத்துக்கு யாராலும் தள்ள முடியுமா... கடந்த அ.தி.மு.க., – தி.மு.க., ஆட்சிகளின் நிர்வாகத் திறனற்ற செயல்பாடுகள் தான், இன்று நிர்மல்குமார் தலையில் வந்து விடியுது என்பது தான், ‘டவுட்’ இல்லாத உண்மை!

lll

பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் நாடு முழுதும், 2.8 கோடிக்கும் அதிகமான இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 6.2 கோடி வாக்காளர்கள் கல்வி, பணி காரணமாக மற்ற மாநிலங்களுக்கு இடம் மாறியதால் நீக்கப்பட்டுள்ளனர்.

டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... இத்தனை கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்தப்பவே, காங்கிரசால ஜெயித்து மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியலையே... இப்ப, போலி வாக்காளர்களையும் நீக்கிட்டதால, மத்தியில் காங்., மீண்டும் ஆட்சியை பிடிப்பது குதிரை கொம்பு தான் என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us