தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: அக். 24

‘டவுட்’ தனபாலு: அக். 24

‘டவுட்’ தனபாலு: அக். 24

1


PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி: தொடர் தோல்விகளை காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது. அதை பற்றி யாரும் ராகுலிடம் கேள்வி கேட்பதில்லை. ஆனால், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வை மட்டும், தேர்தல் தோல்விக்காக திட்டமிட்டு விமர்சிக்கின்றனர்.

டவுட் தனபாலு: அங்க தான் ராகுலின் புத்திசாலித்தனம் இருக்கு... தோல்விகளுக்கு பொறுப்பேற்க வேண்டி வரும்னு பயந்து தானே, கட்சி தலைவர் பதவியிலிருந்து அவர் விலகிட்டாரு... அதேபோல, பழனிசாமியும் தலைமை பதவியிலிருந்து விலகிட்டார் என்றால், அவரை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

பா.ஜ., தமிழக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: கோவையில் 1998ல் அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட 12 இடங்களில் நிகழ்த்தப்பட்ட 13 வெடிகுண்டு தாக்குதல்களில், 56 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் ஊனமுற்றனர். இத்தகைய கொடூர தாக்குதலில் ஈடுபட்டு, சிறையில் இருக்கும் கைதிகளுக்கு உடல்நலக் குறைவு மற்றும் சொந்த காரணங்களை கூறி, ‘பரோல்’ விடுப்பு வழங்கி வீட்டுக்கு அனுப்புவது ஏற்புடையதல்ல. இவர்களுக்கு தி.மு.க., அளித்த ஆதரவை, த.வெ.க.,வும் தொடர்வது சரியல்ல.

டவுட் தனபாலு: நீங்க சொல்றது வாஸ்தவம் தான்... இவ்வளவு கொடூரமான செயலை செய்தவங்க, வாழ்நாள் முழுதும் அதை எண்ணி எண்ணி வருந்தணும்னு தானே சிறையில அடைக்கப்பட்டிருக்காங்க... ஏதோ விருந்தாளிகள் போல அவங்களை அடிக்கடி வீட்டுக்கு அனுப்புவது, ‘டவுட்’ இல்லாம கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் தான்!

lll

பத்திரிகை செய்தி: தமிழகத்தில் தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாவதாக ஒரு கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இது, மாற்றத்துக்கான அறிகுறி என, பா.ம.க., தலைவர் அன்புமணி கருதுகிறார்; எனவே, கட்சியை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். பா.ம.க.,வின் கொள்கைகளை தொகுதி வாரியாக கொண்டு செல்லவும், தொகுதி பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலர் என நியமிக்க அன்புமணி முடிவு செய்துள்ளார்.

டவுட் தனபாலு: பெரிய திராவிட கட்சிகள்லயே இரண்டு அல்லது மூணு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் வீதம் தான் நியமிச்சிருக்காங்க... அவங்களை விட பா.ம.க., பெரிய கட்சின்னு அன்புமணி நினைக்கிறாரா அல்லது தென் மாவட்டங்கள்ல விரல் விட்டு எண்ணும் அளவில் இருக்கிற தன் கட்சியினருக்கு பதவி வழங்க பார்க்கிறாரா என்ற, ‘டவுட்’ தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us