தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: அக். 23

‘டவுட்’ தனபாலு: அக். 23

‘டவுட்’ தனபாலு: அக். 23

1


PUBLISHED ON : அக் 23, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 23, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜ்: முதல்வர் விஜயை அருவருக்கத்தக்க, தரம் தாழ்ந்த சொற்களால், தி.மு.க., பெண் கவுன்சிலர் வசைபாடி உள்ளார். அதை, தி.மு.க., – எம்.பி., கனிமொழி தடுக்காமல் மவுனம் காத்ததும், சென்னை மேயர் பிரியா சிரித்து ரசித்ததும், தமிழக அரசியலையே தலைகுனிய வைத்துள்ளது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான சாக்கடை அரசியலுக்கு பெண்களையும் பழக்கப்படுத்துவது தான் தி.மு.க.,வின் முற்போக்கு கலாசாரமா?

டவுட் தனபாலு: சென்னை மாநகராட்சிக்கு, சீக்கிரமே தேர்தல் நடக்க போகுது... இப்படி எல்லாம் ஏடாகூடமா பேசினால் தான், தலைமையின், ‘குட் புக்’ல இடம் பிடிச்சு மறுபடியும், ‘சீட்’ கிடைக்கும்னு நினைச்சு பேசியிருப்பாங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!

lll

வி.சி.க., தலைவர் திருமாவளவன்: அரசியல் கட்சியினர், வரம்பு மீறாமல் விமர்சனங்களை வெளிப்படுத்த வேண்டும். சமீபகாலமாக பொது மேடைகளில், நாகரிக வரம்புகளை மீறி பேசும் கலாசாரம் பரவி வருவது, கவலை அளிக்கிறது. அரசியலில் விமர்சனங்கள் எழுவது இயல்பு. ஆனால், இரண்டாம், மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் வரம்பு மீறி பேசுகிற போக்கு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய போக்குகள் அரசியலுக்கு ஆரோக்கியமானவை இல்லை; நாகரிக அரசியலுக்கும் நல்லதல்ல.

டவுட் தனபாலு: அதென்ன இரண்டாம், மூன்றாம் நிலையில் இருப்பவர்கள்னு பூசி மெழுகுறீங்க... முதல் நிலையில் இருக்கிற தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியே, நாலாந்தர பேச்சாளர் மாதிரி தானே பொது மேடைகளில் பேசுறாரு... அதை நேரடியா கண்டிக்க முடியாம உங்களை தடுப்பது எது என்ற, ‘டவுட்’ வருதே!

lll

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்த கோவை சத்யன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர், அ.தி.மு.க., ஊடகவியல் பிரிவு செயலர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

டவுட் தனபாலு: அது சரி... ஏற்கனவே, அ.தி.மு.க.,வில் இருக்கிற பல பிரிவுகளும் கலகலத்து போய் கிடக்குது... இதுல, புதுசா ஒரு பிரிவை வேற தொடங்கிட்டீங்களா...? ‘கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடும்’னு சொல்ற நடிகர் அஜித் படத்தின் காமெடி மாதிரி, கட்சியில் புதுசு புதுசா பதவிகளை உருவாக்கிட்டா, ஆட்சியை பிடிச்சிடலாம்னு நினைக்கிறீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us