தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/'டவுட்' தனபாலு!

'டவுட்' தனபாலு!

'டவுட்' தனபாலு!

1


PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன்: முதல்வர் விஜயை தி.மு.க., பெண் கவுன்சிலர் அவதுாறாக பேசுவதை பார்த்து, சென்னை மேயர் என்ற உயரிய பொறுப்பில் இருக்கும் பிரியா, சிறுபிள்ளைத்தனமாக சிரிக்கிறார். தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி இருந்த மேடையில் தான் இந்த பேச்சு. ஆ.ராஜா, ஆர்.எஸ்.பாரதி என ஒவ்வொருவரையும் கனிமொழி கண்டித்து பார்க்கிறார். ஆனால், அவர் பேச்சை யாரும் கேட்பதில்லை.

டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... எதிர்க்கட்சியினரை நாகரிகமாக விமர்சிக்கணும் என்பதில் கனிமொழி உறுதியா இருக்காங்க... ஆனா, தங்களது பிழைப்பில் த.வெ.க.,வினர் மண் அள்ளி போட்டுட்டதா தி.மு.க., வினர் நினைப்பதால், கனிமொழி கருத்துக்கு அங்க மதிப்பில்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: போதைப் பொருள் பயன்பாடு, எதிர்கால தலைமுறையினரை சீரழிக்கிறது. அது, தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு நிதி ஆதாரமா கவும் மாறுகிறது. 2029 டிச., 31-ம் தேதிக்குள், போதையில்லா நாட்டை உருவாக்க, அனைத்து மாநில மற்றும் மத்திய காவல் படைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

டவுட் தனபாலு: தேசத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்த நக்சல்களை ஒழிப்பதில் இலக்கு நிர்ணயித்து, அதை சாதிச்சும் காட்டிட்டீங்க... அதேபோல , போதை ஒழிப்பிலும் சாதிப்பீங்க என்பதில், 'டவுட்' இல்லை... அதேநேரம், மதுபானமும் ஒரு போதைப் பொருள் என்ற வகையில் , நாடு முழுதும் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால், 'டவுட்' இல்லாம உங்களை பாராட்டலாம் !

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடந்தபோது, தி.மு.க., வினரின் மேற்பார்வையில், அவர்கள் விரும்பியபடி, 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அப்போது, நாங்கள் அவர்களுடன் கூட்டணியில் இருந்ததால், கூட்டணி தர்மத்தை காப்பதற்காக, இதுபற்றி பொதுவெளியில் பேசவில்லை. குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய தி.மு.க., இப்போது பிறருடன் சேர்ந்து எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறது. 97 லட்சம் தமிழக வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு, தி.மு.க., தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

டவுட் தனபாலு: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான நீங்க, கண்ணெதிரே அநீதி நடந்தப்ப அதை கண்டிச்சு குரல் கொடுத்திருக்க வேண்டாமா...? சட்டசபை தேர்தல்ல தி.மு.க., தந்த நாலு, 'சீட்'களுக்காக, கூட்டணி தர்மம் என்ற போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டது நியாயமா என்ற, 'டவுட்' தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us