தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: அக். 26

‘டவுட்’ தனபாலு: அக். 26

‘டவுட்’ தனபாலு: அக். 26

2


PUBLISHED ON : அக் 26, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 26, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை: ஒவ்வொரு தேர்தலிலும் மொத்த ஓட்டுப் பதிவில் பெண்களின் பங்கு 51 சதவீதம்; ஆண்களின் பங்கு 49 சதவீதம். ஆனால், பெண்களுக்கான அதிகாரம், 5 முதல் 10 சதவீதம் தான் உள்ளது. எனவே, பெண்களின் கரங்களை உயர்த்தி, அவர்களை முதலாளிகளாக, தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் இலக்கு.

டவுட் தனபாலு: ‘பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு தரணும்; 50 சதவீதம் தரணும்’னு எல்லா அரசியல் கட்சிகளும் வாய் வலிக்க பேசினாலும், நிதர்சனம் என்பது நீங்க சொல்ற மாதிரி தான் இருக்கு... அதனால, நீங்க துவங்க போற கட்சியில பெண்களுக்கு 50 சதவீதம் பதவிகளை வழங்கினால், ‘டவுட்’ இல்லாம உங்களை பாராட்டலாம்!

lll

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: தங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடும், எதிர்த்து செயல்படும் பெண்களை குறி வைத்து, த.வெ.க.,வினர் மிகவும் தரக்குறைவான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பெண்களை மதிப்பதாகவும், பாதுகாப்பதாகவும் கூறிக்கொள்ளும் த.வெ.க.,வினரின் லட்சணம் இதுதானா?

டவுட் தனபாலு: த.வெ.க., வினர் செய்றது தப்பு என்பதில், ‘டவுட்’டே இல்லை... அதேநேரம், த.வெ.க.,வினர் பற்றியும், முதல்வர் விஜய் பற்றியும் பொது மேடைகள்ல உங்க கட்சியினர் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் பேசுறாங்களே... அதை எல்லாம் நிறுத்த, உங்க கட்சி தலைமையிடம் பேசி நீங்க ஏதாவது நடவடிக்கை எடுத்தீங்களா என்ற, ‘டவுட்’டும் சேர்ந்தே வருதே!

lll

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.,யின் தமிழக செயலர் பன்னீர்செல்வம்: தேர்தல் கமிஷன் கொண்டு வந்த எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், வெளிப்படை தன்மையுடன் நியாயமாக நடந்தன. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., வாயிலாக போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் தான், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இல்லையெனில், த.வெ.க., ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. இதை உணர்ந்து த.வெ.க., செயல்பட வேண்டும்.

டவுட் தனபாலு: அது சரி... ‘எஸ்.ஐ.ஆர்., மட்டும் நடக்கலை என்றால், தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., அல்லது அ.தி.மு.க., தான் ஆட்சிக்கு வந்திருக்கும்... அவங்க வந்திருந்தா, த.வெ.க.,வை உண்டு, இல்லைன்னு பண்ணியிருப்பாங்க... அதனால, மத்திய பா.ஜ., அரசுடன் இணக்கமா போங்க’ன்னு, த.வெ.க., அரசுக்கு நாசுக்கா நீங்க அறிவுரை தர்றது, ‘டவுட்’டே இல்லாம புரியது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us