தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/'டவுட்' தனபாலு: நவ. 30

'டவுட்' தனபாலு: நவ. 30

'டவுட்' தனபாலு: நவ. 30


PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான்: எனக்கு பதவி ஆசையும், பண ஆசையும் இருந்திருந்தால், எப்போதோ கூட்டணிக்கு சென்று எம்.எல்.ஏ., ஆகியிருப்பேன். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பணமும், அதிகாரமும் கடுமையாக வேலை செய்யும். அந்த தொகுதியில் நான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளேன். என் வெற்றியை தடுப்பதற்காக, இந்த தொகுதியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் விஜய் தொடங்க உள்ளார்.

டவுட் தனபாலு: நீங்களும் 2009ல் கட்சி துவங்கி, 17 வருஷங்களாகிடுச்சு... ஆனா, ஒரு கவுன்சிலர் பதவியில் கூட அமர முடியல... இப்ப, அம்பாசமுத்திரத்துக்கு குறி வச்சிருக்கீங்க... த.வெ.க., சார்பில் அங்க களமிறங்க போகும், 500 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான முன்னாள் எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையாவையும், முதல்வர் விஜயின் செல்வாக்கையும் மீறி உங்களால ஜெயிக்க முடியுமா என்பது, 'டவுட்' தான்!

lll

த.வெ.க., சமூக வலைதள அணி பதிவு: ஆட்சியில் இருந்த வரை, 'கவர்னரை பேச விடாமல் செய்து விட்டோம்' என கொக்கரித்து விட்டு, இப்போது, 'ஆபத்பாந்தவனே' என, கவர்னரின் காலில் விழவும் தி.மு.க.,வினர் தயாராகி விட்டனர். 'கருணாநிதி ஆசி பெற்ற சின்னம் தாமரை' என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. பா.ஜ.,வை தமிழகத்தில் வளர்க்கும் பணியை, தி.மு.க., தலைமை ஏற்று நடத்த உள்ளது.



டவுட் தனபாலு: அது சரி... பா.ஜ.,வை பொறுத்தவரை, தமிழகத்தில் கொழு கொம்பு இல்லாம தவிச்சிட்டு இருக்குது... அந்த கட்சியை வளர்த்தால் தான், த.வெ.க.,வை வீழ்த்த முடியும் என்ற சூழல் வந்தால், அதை செய்யவும் தி.மு.க., தயங்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி அறிக்கை: கவர்னர் என்ற பதவியே கூடாது என்பதே என்றைக்கும் எங்கள் நிலைப்பாடு. ஆனால், கவர்னர் பதவி உள்ள வரை, அதற்கான மரியாதையை அண்ணாதுரை காலம் முதல் தி.மு.க., எப்போதும் வழங்கியே உள்ளது. அதுதான் ஜனநாயக மரபு. விக்கிரவாண்டி த.வெ.க., மாநாட்டில், 'கவர்னர் பதவி தேவையில்லை' என சொல்லிவிட்டு, அதே கவர்னரிடம் மனு அளிக்கச் சென்ற சோப்ளாங்கி யார் தெரியுமா?

டவுட் தனபாலு: தி.மு.க., - த.வெ.க.,வின் கொள்கைகளில் பெருசா எந்த வித்தியாசமும் இல்லையே... உங்களது கொள்கையை போலவே, 'கவர்னர் பதவி இருக்கும் வரை அதுக்கு மரியாதை தரணும்' என்று தான், அவரிடம் போய் அன்றைய தி.மு.க., ஆட்சி மீது விஜய் புகார் குடுத்தார் என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us