PUBLISHED ON : நவ 04, 2026 12:00 AM

பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதிக்க, பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி, காங்கிரசின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மற்றும் சமாஜ்வாதி எம்.பி., அகிலேஷ் யாதவுக்கு சவால் விடுக்கிறேன். விவாதிக்க நாங்கள் தயார்; எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
டவுட் தனபாலு: பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தில் உங்களது கருத்துக்களுக்கு பதிலடி தர, அவங்களிடம், ‘சரக்கு’ இல்லையே... அதனால தான், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், ‘சினிமா செட்டிங்’ மாதிரி பார்லிமென்ட் கூட்டத்தைக் கூட்டி, அவங்களுக்குள்ளயே பேசிக்கிட்டாங்க என்பது, ‘டவுட்’ இல்லாம தெரியுதே!
lll
காங்கேயம் தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., நடராஜ்: எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, பழனிசாமி ஆட்சி காலங்களில் நெசவாளர்களுக்கு இலவச வேட்டி – சேலை திட்டம், குடியிருப்புகள், நிதி ஒதுக்கீடு போன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோல, தற்போது ஆளும் த.வெ.க., அரசும், பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை அனைத்து வகையிலும் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்தகைய மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வரும் அரசுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
டவுட் தனபாலு: ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்பதை நிரூபிச்சிட்டீங்க... ஆனா, ஆளுங்கட்சியை தினமும் கரிச்சு கொட்டிட்டு இருக்கும் உங்க தலைவர் பழனிசாமி, அந்த பக்கம் தாவ நீங்க முடிவு பண்ணிட்டதா கருதி, உங்களை ‘கட்டம்’ கட்டாம இருப்பாரா என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன்: முதல்வர் விஜய் குறித்து அவதுாறாக பேசியதாக பொய் வழக்கை பதிவு செய்துள்ளனர்; விசாரணைக்காக அழைத்ததால் ஆஜரானேன். தி.மு.க.,வில் யாரெல்லாம் சிறப்பாகச் செயல்படுகின்றனரோ, அவர்களை குறி வைத்து பழிவாங்க நினைக்கின்றனர். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அவற்றை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
டவுட் தனபாலு: அது சரி... உங்க தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணி செயலர் உதயநிதியை எல்லாம், எந்த விசாரணைக்கும் போலீசார் அழைக்கலையே... அப்படி என்றால், தி.மு.க.,வில் அவங்க செயல்பாடுகள் எல்லாம் சிறப்பாக இல்லையோ என்ற, ‘டவுட்’ வருதே!
lll
