தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: அக். 18

‘டவுட்’ தனபாலு: அக். 18

‘டவுட்’ தனபாலு: அக். 18


PUBLISHED ON : அக் 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: இலங்கையைச் சேர்ந்த ஒருவர், ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தி கருத்து வெளியிட்டதால், சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை தமிழர் அனோஜன் சிவராசா, இஸ்லாம் குறித்து கருத்து பதிவிட்டார். இதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது விடுதலைக்காக, சென்னையில் உள்ள இலங்கை துணை துாதரக அதிகாரிகளிடம், ஹிந்து முன்னணி கடிதம் அளித்ததுடன், இந்திய வெளியுறவு துறையிடமும் கோரிக்கை விடுத்தது. இதன் தொடர்ச்சியாக, சவுதி அரேபிய நீதிமன்றம் அவரது மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. தமிழ், தமிழர் என பேசும் திராவிட கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் அவருக்காக குரல் கொடுக்காதது ஏன்?

டவுட் தனபாலு: மற்ற தலைவர்களை விடுங்க... இலங்கை தமிழர்கள் என்றாலே, தண்ணீர் கூட குடிக்காமல் பல மணி நேரம் மேடைகளில் முழங்கும் வைகோ, சீமான் எல்லாம் எங்க போயிட்டாங்க என்ற, ‘டவுட்’ வருதே!

lll

மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம்: தமிழக மின் வாரியம், 1 யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மின் பற்றாக்குறையை முன்கூட்டியே கணக்கிட்டு, உரிய காலத்தில் தேவையான நடவடிக்கை எடுக்காமல், மின் வெட்டை காரணம் காட்டி, கொள்ளை விலைக்கு கொள்முதல் செய்வது, முற்றிலும் நியாயமற்ற அணுகுமுறை.

டவுட் தனபாலு: கடந்த அ.தி.மு.க., – தி.மு.க., ஆட்சிகள்ல தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்து, ‘பலன்’ பெற்ற அதிகாரிகள் சிலர், இந்த ஆட்சியில அப்படி செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தாங்க... இதனால, அவங்களே செயற்கையா மின்வெட்டை ஏற்படுத்தி, த.வெ.க., அரசையும் தங்களது வலையில விழ வச்சிட்டாங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!

lll

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ‘அ.தி.மு.க., ஒன்றிய செயலர்கள், 1,000த்துக்கும் மேற்பட்டோர் எங்களுடன் வர உள்ளனர்’ என, த.வெ.க., அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். குதிரை பேரத்தை சட்டசபையில் தொடங்கி, கிளை செயலர் வரை வந்து விட்டனர். அரசியலில் இரண்டு ரகத்தினர் உண்டு. ஒன்று அரசியல்வாதி; மற்றொன்று அரசியல் வியாபாரி. இவற்றில் அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோர் இரண்டாம் ரகம்.

டவுட் தனபாலு: அரசியல்ல மூணாவதா ஒரு ரகமும் இருக்கே... தட்டு தடுமாறி, ‘தவழ்ந்து’ முக்கிய பதவிகளுக்கு வந்துட்டு, ஏறி வந்த ஏணியை எட்டி உதைச்சிடுறாங்களே... அதுவும் இல்லாம, ‘என்னால மட்டும் தான் கட்சி இருக்கு... யாரையும் நம்பி நான் இல்ல’ன்னு இறுமாப்புடன் செயல்படும் சிலர் உங்க கண்ணுக்கு தெரியலையா என்ற, ‘டவுட்’ எழுதே!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us