தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: அக். 20

‘டவுட்’ தனபாலு: அக். 20

‘டவுட்’ தனபாலு: அக். 20

2


PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை காங்., – எம்.பி., கார்த்தி: தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் மீது சில மனஸ்தாபங்கள் இருந்தாலும், மாநில அளவில் அரசியல் போட்டி இருந்தாலும், மத்திய அளவில் ஒன்றாக ஒத்துழைக்க முடியும். காங்கிரஸ், பா.ஜ., மட்டுமே இரு தேசிய கட்சிகள். எனவே, பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள், காங்கிரசோடு தான் கைகோர்க்க வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணி உருவாகுமா என்பதை இப்போதே கூற முடியாது.

டவுட் தனபாலு: ‘தேசிய அளவில் எங்க ரெண்டு கட்சிகளை விட்டா, மற்ற கட்சிகளுக்கு நாதியில்லை’ என்பது போல பேசுறீங்களே... எல்லா தேர்தல்களிலும் அடி வாங்கி, உங்க கட்சி தான் காணாம போயிட்டு இருக்கு... நீங்க சொல்றது, ‘புலிக்கு பயந்தவங்க எல்லாம் என் மீது வந்து படுங்க’ என்பது மாதிரி இருக்கு என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

பத்திரிகை செய்தி: தே.ஜ., கூட்டணியில் நீண்ட காலம் நீடித்த த.மா.கா., சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அக்கூட்டணியில் இருந்து விலகியது; மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க.,விற்கு ஆதரவு அளித்தது. ஆயினும் இடைத்தேர்தலில், த.வெ.க., கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வாசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து சென்னையில், ‘இண்டி’ கூட்டணி நடத்திய போராட்டத்திற்கும் வாசனை அழைக்கவில்லை. இதனால், கோபத்தில் உள்ள த.மா.கா., உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.

டவுட் தனபாலு: அது சரி... தமிழகம் முழுக்க 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகள் உள்ளன... அத்தனை பதவிகளிலும் போட்டியிட த.மா.கா.,வில் ஆட்கள் இருக்காங்களா என்ற, ‘டவுட்’ வருதே!

lll

வி.சி.க., தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வாயிலாக, 97.37 லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டன; சென்னை கொளத்துார் தொகுதியில் மட்டும், 1 லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டன. அதன்பின், ஸ்டாலினை நான் நேரில் சந்தித்தபோது, ‘கொளத்துாரில் பிரச்னை உள்ளதாக சொல்கின்றனர்; நீங்கள் ஏன் தொகுதி மாறி நிற்கக்கூடாது?’ என்றேன். அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

டவுட் தனபாலு: உங்க எச்சரிக்கையை கேட்டு, ஸ்டாலின் தொகுதி மாறியிருந்தால், இந்நேரம் ஜெயிச்சு சட்டசபைக்குள்ள போயிருப்பாரு... ஆனா, அங்க விஜய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாம திணறியிருப்பாரு... அதனால, ‘நல்லவேளை திருமாவளவன் யோசனையை கேட்கலை’ன்னு ஸ்டாலின் இப்ப சந்தோஷமா தான் இருப்பார் என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us