தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: அக். 29

‘டவுட்’ தனபாலு: அக். 29

‘டவுட்’ தனபாலு: அக். 29


PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க.,வுடன் கூட்டணியில் இருக்கும், காங்கிரசைச் சேர்ந்த, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்: தற்போது, முதல்வர் விஜய் மற்றும் கவர்னர் இடையே சுமுகமான புரிதல் உள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடக்கிறது. அவர் பெயரில் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நீண்டகால காத்திருப்புக்கு பின், அமைச்சரவையில் காங்., இடம்பெற்றுள்ளது; இருவர் அமைச்சராக இருப்பதே எங்களுக்கு போதுமானது.

டவுட் தனபாலு: உங்க கட்சியின் இன்னொரு அமைச்சரான ராஜேஷ் குமார், ‘இரண்டு அமைச்சர் பதவிகளால நாங்க திருப்தியடைய மாட்டோம்... காமராஜர் ஆட்சி தான் எங்க கனவு’ன்னு சொல்றாரு... நீங்க, அதுக்கு மாறா பேசுறீங்களே... த.வெ.க.,வினரின் மனசு கோணாம நடந்துக்க முடிவு பண்ணிட்டீங்க என்பது, ‘டவுட்’ இல்லாம தெரியுது!



பத்திரிகை செய்தி: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு, 15 சதவீத இடங்களை ஒதுக்கி விட்டு, 85 சதவீத இடங்களில் போட்டியிட த.வெ.க., வியூகம் வகுத்துள்ளது. ஆனால், கூட்டணி கட்சிகள், அதிக இடங்க ள் மற்றும் மேயர் பதவி உள்ளிட்ட வற்றை எதிர்பார்க்கின்றன. எனினும், அந்த கட்சிகளுடன் பேச்சு நடத்தி, 15 சதவீதத்துக்கு ஒப்புக்கொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: த.வெ.க., கூட்டணியில் இருக்கும் கட்சி க ளுக்கு எல்லாம், ஒற்றை இலக்கத் தில், அதாவது 1 முதல் 3 சதவீதம் ஓட்டுகள் கூட இருக்காது... அதனால , உள்ளாட்சி தேர்தலில் அவங்களுக்கு ஒற்றை இலக்கத்தில் இடங்கள் ஒதுக்குவதே அதிகம் என்பதில், ‘டவுட்’டே இல்லை!



பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: பீஹாரில் நடந்த ஒரு நிகழ்ச்சி யில் பங்கேற்ற காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியின் மறைந்த தந்தை குறித்து தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்த தேசமும் மோடியின் குடும்பம் என்பதை காங்., மறந்து விட்டது. இந்த கீழ்த்தர அரசியலால் தான், காங் கிரசை மக்கள் வெறுக்கின்றனர் என்பது அவர்களுக்கு இன்னும் புரியவில்லை.

டவுட் தனபாலு: சரி விடுங்க... ‘காங்., கட்சியை அழிக்கிறதுக்கு ராகுலுக்கு மட்டும் தான் உரிமை இருக்கா... கட்சியின் தேசிய தலைவரான எனக்கும் அதுல பங்கிருக்க வேண்டாமா’ன்னு யோசனை பண்ணி, கார்கே இப்படி எல்லாம் பேசியிருப்பாரோ என்ற, ‘டவுட்’ தான் வருது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us