தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

4


PUBLISHED ON : ஜூலை 20, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2026 12:55 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கம்யூ., கட்சியின் திருப்பூர் எம்.பி., சுப்பராயன்: த.வெ.க., அமைச்சரவையில் நாங்கள் ஒருபோதும் பங்கேற்க மாட்டோம். இதுகுறித்து, சமீபத்தில் எங்கள் மாநிலச் செயலர் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம். அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி கட்சி முடிவெடுக்கவில்லை. த.வெ.க., ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்போம். அரசு எடுக்கும் முடிவின் தன்மைக்கேற்பவே எங்கள் எதிர்ப்பும், ஆதரவும் இருக்கும்.

டவுட் தனபாலு: த.வெ.க., அரசுக்கு உங்க கட்சி ஆதரவு தந்தாலும், தி.மு.க., தயவில் ஜெயித்து எம்.பி.,யான நீங்க, இன்னும் அந்த கட்சிக்கு விசுவாசமாகவே இருக்கீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதனால தான், ஆட்சியில் பங்கேற்க முட்டுக்கட்டை போடுறீங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

சிவகங்கை, காங்., - எம்.பி., கார்த்தி: கடந்த பார்லிமென்ட் தொடரில் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்தவர்கள், இந்த முறையும் எதிர்ப்பர் என நம்புகிறேன். ஏனெனில், தமிழகத்திற்கு லோக்சபா எம்.பி., தொகுதிகள் எண்ணிக்கை, 39ல் இருந்து 60 ஆக அதிகரிக்கும்; ஆனால், உத்தர பிரதேசத்துக்கு 80ல் இருந்து 120 ஆகும். லோக்சபாவில், 543 பேர் இருந்தாலே பேச நேரம் கிடைக்காது; எம்.பி.,க்கள் எண்ணிக்கை 815 ஆக உயர்ந்தால், பேச வாய்ப்பே இல்லாமல், கூடிப் பிரியும் இடமாக பார்லிமென்ட் மாறிவிடும்.



டவுட் தனபாலு: அது சரி... நீங்க உட்பட நம் மாநில எம்.பி.,க்கள் பலரும் இதுவரை லோக்சபாவில் பேசி பேசி, தமிழகத்துக்கு எத்தனை திட்டங்களை கொண்டு வந்திருக்கீங்கன்னு பட்டியல் போட முடியுமா...? அதனால, எண்ணிக்கையில் எதுவுமில்லை; மக்களுக்காக பாடுபடணும் என்ற எண்ணம் இருந்தால் போதும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

வி.சி.க., தலைவர் திருமாவளவன்: எங்களை பார்த்து, 'இரண்டு எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு இவ்வளவு ஆட்டமா' என்கின்றனர். வெறும் இரண்டு இடங்களில் ஜெயித்து விட்டு, அமைச்சர் பதவி வாங்கி விட்டதாக பேசுகின்றனர். இரண்டு 'சீட்'கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்தது, அவர்களுக்கு தெரியவில்லை; நினைவில்லை. ஆட்சி அமைக்க, அந்த இரண்டு சீட்கள் அவசியம் தேவை.

டவுட் தனபாலு: இந்த இரண்டு சீட் பஞ்சாயத்து அஞ்சு வருஷமும் பேசப்படும்னு பயப்படுறீங்களோ...? அதனால தான், தி.மு.க.,வை தீவிரமா எதிர்க்காம, 'அவங்களுடன் நட்பு இன்னும் தொடருது'ன்னு சொல்லி, அந்த பக்கமும், 'துண்டு' போட்டு வச்சிருக்கீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us