தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஜூலை 25, 2026 12:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2026 12:20 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன்: காலை உணவு திட்டத்திற்கு, 'முதல்வர் காலை உணவு திட்டம்' என்று தான் ஸ்டாலின் பெயர் வைத்திருந்தார். 'ஸ்டாலின் காலை உணவு திட்டம்' என பெயர் வைக்கவில்லை. தற்போது, விஜய் தானே முதல்வர்? ஆனால், இன்றும் ஸ்டாலினை தான் முதல்வர் என விஜய் நினைப்பதால், திட்டத்தின் பெயரை மாற்றுகிறார். மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர் என்பதால், அவரது பெயரை வைப்பதில் தவறில்லை.

டவுட் தனபாலு: ஸ்டாலின் கொண்டு வந்த திட்டத்தின் பெயரை மாத்தியதற்காக, முதல்வர் விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவிப்பீங்கன்னு பார்த்தா, 'விஜய் செஞ்சது சரி தான்'கிற மாதிரி பேசுறீங்களே... தி.மு.க., பொதுச்செயலர் பதவியில் நீடிக்கும் எண்ணம் இல்லையோ என்ற, 'டவுட்' தான் வருது!

மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: தமிழகத்தில் தொழிலாளர்கள், மாணவர் அமைப்பினர், காவல் துறை மற்றும் தமிழக அரசால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த கால ஆட்சி எப்படியோ, அப்படித்தான் தற்போதைய ஆட்சியும் நடந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், எங்களின் நிபந்தனையற்ற ஆதரவு என்ற நிலையை மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

டவுட் தனபாலு: உங்களை மாதிரி கட்சிகளை நம்பி, ஐந்து வருஷம் ஆட்சியை நடத்த முடியாதுன்னு தானே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா பண்ண வச்சு, த.வெ.க.,வுக்கு இழுத்துட்டு இருக்காங்க... அதனால, நீங்க ஆதரவை வாபஸ் வாங்கினாலும், த.வெ.க., அரசுக்கு எந்த ஆபத்தும் வராது என்பதில், 'டவுட்'டே இல்லை!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: டில்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம், நாடு முழுதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 'நீட்' தேர்வு, பெரும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எச்சரித்த முதல் இயக்கம் தி.மு.க., தான். மற்ற எந்த கோரிக்கைகளை விடவும், நீட் தேர்வை ரத்து செய்வதே, இந்த போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும்.

டவுட் தனபாலு: அது இருக்கட்டும்... டில்லி போராட்டத்தில் பங்கேற்ற, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், உங்க முன்னாள் கூட்டாளியுமான ராகுலை, போலீசார் குண்டு கட்டா துாக்கி கைது செஞ்சாங்களே... நாடு முழுக்க பல அரசியல் தலைவர்கள் அதுக்கு கண்டனம் தெரிவிச்சும், நீங்க கண்டுக்கவே இல்லையே... உங்க கூட்டணிக்கு, 'டாட்டா' காட்டிய ராகுலுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்னு நினைக்கிறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us