தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : ஆக 19, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்:


பிற கட்சிகளில், 30 முதல் 40 ஆண்டுகளாக ஒரே நிர்வாகிகள் தான் இருப்பர். ஆனால், த.வெ.க.,வில் எப்போது வேண்டுமானாலும் கீழே இருப்போர் மேலே வருவர்; மேலே இருப்போர் கீழேயும் இறக்கப்படுவர். எனவே, நமது கட்சி நிர்வாகிகள், எப்போதும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஊழலற்ற ஆட்சியை இலக்காக கொண்டு செயல்படும் முதல்வருக்கு, நாம் உறுதுணையாக இருப்போம்.

டவுட் தனபாலு:


முதல்வர் விஜயை சுற்றி இப்ப பலர் இருந்தாலும், பல வருஷங்களா நீங்க தான் அவர் கூடவே வலம் வர்றீங்க... உங்களிடம் தான் எல்லா விஷயங்களையும் முதல்வர் பகிர்ந்துக்குவார்னும் சொல்றாங்க... உங்க கருத்தை பார்த்தால், சட்டசபை கூட்டம் முடிஞ்சதும், அமைச்சரவையிலும், கட்சி நிர்வாகத்துலயும் அதிரடி மாற்றங்கள் வருமோ என்ற, 'டவுட்' கிளம்புதே!

----

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்:


முதல்வர் விஜயின் தாய் குறித்து, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் அவதுாறாக பேசியதாக சொல்கின்றனர். அவர் அப்படி பேசுபவர் அல்ல; நிதானமான சுபாவம் கொண்டவர். ஆனால், அவர் சேர்ந்துள்ள இடம் அப்படியா என தெரியவில்லை. அதேநேரத்தில், நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால், த.வெ.க., ஆட்சியை மத்திய அரசு ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்து விடும்.

டவுட் தனபாலு:


'நயினார் நாகேந்திரன் பேசியது தப்பு'ன்னு அடிச்சு பேசாம, நாசுக்கா நழுவுறீங்களே... அவர் மீது த.வெ.க., அரசு நடவடிக்கை எடுத்து, இந்த ஆட்சிக்கு ஏதும் ஆபத்து வந்தால், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்னு கொக்கு போல காத்துட்டு இருக்கீங்களோ என்ற, 'டவுட்' எழுதே!

------

தமிழக வெற்றிக் கழக துணை பொதுச்செயலர் ஜாகிர் உசேன்:


பெண்கள் குறித்து இழிவாக பேசிய பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் குறித்து பேச யாருக்கும் தகுதியில்லை. முதல்வரின் தாய் குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய விவகாரத்தில், சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்; விரைவில், சட்டம் தன் கடமையை செய்யும்.

டவுட் தனபாலு:


தி.மு.க.,வின் உதயநிதி, தஞ்சையில் முதல்வர் பற்றி அவதுாறாக பேசிய மறுநாளே, அவரது வீடு புகுந்து அவரை கைது செய்தீங்களே... அந்த வேகத்தை, நயினார் நாகேந்திரன் மீது ஏன் காட்டலை...? அவர் மீது கை வச்சா, மத்திய பா.ஜ., அரசின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும்ன்னு, தயங்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us