தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஆக 20, 2026 12:41 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2026 12:41 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மா.கம்யூ., கட்சியின் தமிழக செயலர் சண்முகம்: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், காலியாக உள்ள 30,000 பணி யிடங்களை நிரப்புமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில், 'சால்வாட்' என்ற நிறுவனம் வாயிலாக ஒப்பந்த பணியாளர்களை நியமித்தனர். தற்போதைய த.வெ.க., அரசும், 'எஸ். எஸ் என்டர்பிரைசஸ்' என்ற உ.பி., மாநில நிறுவனத்திற்கு, 'டெண்டர்' வழங்கி கண்டக்டர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதனால், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்; எனவே, உ.பி., நிறுவனத்திற்கு வழங்கிய டெண் டரை ரத்து செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு: கடந்த தி.மு.க., ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்களை நியமிச்சப்பவும், இதே மாதிரி கண்டன அறிக்கை விட்டுட்டு கமுக்கமா இருந்துட்டீங்க... அதே மாதிரி இப்பவும், 'கடமை'யை முடிச்சுக்குவீங்களா அல்லது காம்ரேட்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்து வீங்களா என்ற, 'டவுட்' வருதே!

பத்திரிகை செய்தி: 'தி.மு.க.,வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், த.வெ.க., மற்றும் அண்ணா மலையின், 'வீ த லீடர்ஸ்' அமைப்பால் எழும் சவால்களை எதிர் கொள்ளவும், தி.மு.க.,வில் இளைஞர் களின் பங்களிப்பு அவசியம்' என, உதயநிதி தரப்பினர் கருதுகின்றனர். 'எனவே, உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும், தி.மு.க., மூத்த நிர்வாகிகள் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

டவுட் தனபாலு: கருணாநிதி, ஸ்டாலின் காலத்து தலைவர்கள் பலரும், 70 - 75 வயதை தாண்டியவங்களா இருக்காங்க... அவங்களால, ஓடியாடி கட்சி பணிகளை செய்ய முடியாது... ஆனாலும், பல வருஷமா கட்சி பதவிகளை அனுபவிச்சவங்க, அவ்வளவு சுலபமா இளைஞர்களுக்கு வழி விடுவாங்களா என்பது, 'டவுட்' தான்!

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,வுமான வேலுமணி: சட்டசபையில், த.வெ.க., ஆட்சிக்கு எதிராக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமி கடும் விமர்சனத்தை முன்வைக்கும் நிலையில், நம் அணியின் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் அரசை விமர்சிக்க தேவையில்லை; முடிந்த வரை அமைதியாகவே இருப்போம். அமைச்சர்களை சந்திக்க வேண்டும் என நினைத்தால், என்னிடம் சொல்லுங்கள்; நான் ஏற்பாடு செய்து தருகிறேன்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., கரை வேஷ்டி கட்டியிருக்கும் உங்க ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், பழக்க தோஷத்துல ஆளுங்கட்சியை திட்டிடக் கூடாதுன்னு உஷாராவே இருக்கீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதேநேரம், அ.தி.மு.க.,வில் ஒரு காலும், த.வெ.க., பக்கம் ஒரு காலுமா இன்னும் எத்தனை நாட்கள் இருக்க போறீங்க என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us