தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : செப் 11, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2026 01:40 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக முதல்வர் விஜய்: சட்டசபையில், கடந்த 7ம் தேதி காவல் துறை மானியக் கோரிக்கையில் என் பதிலுரையின்போது, என் உடல் மொழி எதேச்சையாக வெளிப்பட்டது தானே தவிர, எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை. தனிப்பட்ட முறையில், யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக, அதை அர்த்தம் கொள்ள வேண்டாம்.

டவுட் தனபாலு: அது சரி... வழக்கமா, 'சட்டசபையில் முதல்வர் பதிலுரையில் எந்த உருப்படியான அறிவிப்புகளும் இல்லை'ன்னு தான் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும்... இப்ப, நீங்க அறிவிப்புகள் வெளியிடாததை எல்லாரும் மறந்துட்டு, உங்க உடல் மொழியை மட்டும் தான் விமர்சிக்கிறாங்க, பார்த்தீங்களா...? இதை தான் நீங்களும் எதிர்பார்த்தீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன்: தற்போது, நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. இரண்டு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து, யாருக்கு ஆதரவு என்ற முடிவை அறிவிப்போம். த.வெ.க.,வை நாங்கள் அலட்சியமாக கருதவில்லை.

டவுட் தனபாலு: இப்ப நீங்க, ஆளும் த.வெ.க., அரசுக்கு வெளியில இருந்து ஆதரவு தர்றீங்க... அப்படியிருக்கிறப்ப, சட்டசபை தேர்தல்ல, தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது... 'த.வெ.க.,வை தான் ஆதரிக்க போறோம்' என்ற முடிவை எடுக்க, ஆலோசனை கூட்டம் எல்லாம் அவசியமா என்ற, 'டவுட்' எழுதே!

lமா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம்: சண்டை மன்றமாக, சத்த மன்றமாக, சட்டசபையின் நேரம் வீணாக்கப்பட்டதை கண்டிக்கிறோம். காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதில் சொல்லவில்லை. நினைத்ததை எல்லாம் பேசுவதற்கு சட்டசபை இடமில்லை. மூன்று, 'பைல்'கள், தன் மேஜையில் இருப்பதாக சொன்ன முதல்வர், அவற்றை அப்படியே மூட்டை கட்டி விட்டார்.

டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் தேர்தலை சந்தித்து, இரண்டு எம்.எல்.ஏ.,க்களையும் ஜெயிச்சீங்க... தேர்தலுக்கு பிறகு உங்க கட்சி, த.வெ.க., அரசுக்கு வெளியில இருந்து ஆதரவு தெரிவிக்குது... தி.மு.க., கூட்டணியில் இருந்தும் வெளியில வந்துட்டீங்க... இப்ப, ஆளுங்கட்சிக்கு எதிரான உங்க ஆவேசத்தை பார்த்தால், பழையபடி தி.மு.க., கூட்டணிக்கே, 'யூ டர்ன்' எடுக்க போறீங்களோ என்ற, 'டவுட்' கிளம்புதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us