தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : செப் 15, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2026 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் கோவி.செழியன்: கடந்த 1976-ம் ஆண்டு, 'மிசா'வில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு முதுகெலும்பு, தாடை உடைக்கப்பட்டதை, உடல் மொழியால் முதல்வர் விஜய் அசிங்கப்படுத்தினார். பல கட்சிகள் மாறிய மின் துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு, மிசா வரலாறு தெரியாது. ஒரு கட்சியில் இருந்து உழைத்து முன்னேறி இருந்தால் வரலாறு தெரியும்.

டவுட் தனபாலு: பல கட்சி களுக்கு மாறினால், வரலாறு தெரியாம போயிடுமா என்ன...? அப்படி பார்த்தால், உங்க கட்சியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களில், 10க்கும் மேற்பட்டவங்க அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவங்க தானே... அவங்களுக்கு எல்லாம் கருணாநிதி, மிசா, ஸ்டாலின் பற்றிய பழைய வரலாறு தெரியுமா, தெரியாதா என்ற, 'டவுட்' வருதே!

தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி: தமிழகம் முழுதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. மின்சாரம் இருந்தாலும் கூட, 'வோல்டேஜ்' பிரச்னையால் மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். தமிழகம் முழுதும் மக்கள் போராட்டம் நடத்தும் செய்திகள் நாள்தோறும் வருகின்றன. ஆனால், மின் துறை அமைச்சர் நிர்மல்குமாரோ, மின்வெட்டை சரி செய்யாமல் அவதுாறுகளை பரப்புகிறார்.

டவுட் தனபாலு: முந்தைய தி.மு.க., ஆட்சியில், புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதையாவது தொடங்கினீங்களா...? கமிஷனுக்காக தனியாரிடம் மின்சாரத்தை கொள்முதல் பண்ணியதால, இன்று வந்த த.வெ.க., அரசு, மின் துறையை சீரமைக்க போராடிட்டு இருக்கு... அதனால, இன்றைய மின்வெட்டு பிரச்னைக்கு 100 சதவீதம் நீங்க தான் காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ஜ.,வைச் சேர்ந்த, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்: இளைஞர்கள், சமூக ஊடகங்களில் தங்கள் நேரத்தை வீணடிக்காமல், பாடத்திட்டம் சார்ந்த புத்தகங்களை தாண்டி, பிற புத்தகங் களையும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். படைப்பாற்றலையும், நல்ல சிந்தனைகளையும் ஊக்குவிக்கும் புத்தகங்களை வாங்கி, வீடுகளிலேயே நுாலகத்தை உருவாக்க வேண்டும்.

டவுட் தனபாலு: இன்றைய இளைஞர்கள் தங்களது மொபைல் போனில், 'சார்ஜ்' அல்லது இணையதளத்தின், 'டேட்டா' தீர்ந்து போயிட்டா பதறி போயிடுறாங்களே... 'பார்ப்பதை' விட, 'படிப்பது' நல்லது என்ற உங்க யோசனையை ஏற்று நடந்தால், இளைஞர் சமுதாயம் எண்ணற்ற சாதனைகளை படைக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us