தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : செப் 16, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்:


தமிழகம் முழுதும் நிலவும் கடுமையான மின்வெட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது. குறுவை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கு மின் மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகளும், மக்களும் கண்ணீர் வடிக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததுமே மக்களை இருளில் தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் த.வெ.க., அரசு, மின் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பா.ஜ., போராட்டங்களை முன்னெடுக்கும்.

டவுட் தனபாலு:


நீங்களும் அடிக்கடி, 'போராட்டங்களை முன்னெடுப்போம்'னு தான் சொல்றீங்க... ஆனா, ஒரு போராட்டம் கூட நடத்த மாட்டேங்கிறீங்களே... உங்க கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை அளவுக்கு உங்களால கூட்டம் சேர்க்க முடியாதுன்னு தயங்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

----

பா.ம.க., தலைவர் அன்புமணி:


தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிமனைகளில், 6,171 தொழில் பழகுநர் பயிற்சி இடங்கள் காலியாக உள்ளன. 'இந்த இடங்களுக்கு, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்' என, 2019ல் விதிகள் மாற்றப்பட்டன. அந்த விதிகள் இப்போது மீறப்பட்டு, 'கர்நாடகாவின் தட்சிண கன்னடா, ஆந்திராவின் நெல்லுார், சித்துார், கேரளா, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு என பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்' என, தெற்கு ரயில்வே சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்களுக்கான பணி, பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்கப்படும். எனவே, இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே ரத்து செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு:


ஏற்கனவே, ரயில்வே வாரியம் நடத்திய தேர்வுகளை, ஹிந்தியில் எழுதிய வட மாநில இளைஞர்கள் தமிழகம் முழுக்க வேலை கிடைச்சு வந்துட்டாங்க... நம்ம இளைஞர்கள் தான் ஹிந்தியும் தெரியாம, ஆங்கிலமும் புரியாம தடுமாறிட்டு இருக்காங்க... திராவிட கட்சிகளின் இருமொழி கொள்கையால் வந்த கேடுகளில் இதுவும் ஒன்று என்பதில், 'டவுட்'டே இல்லை!

------

திருச்சி எம்.பி.,யும், ம.தி.மு.க., முதன்மை செயலருமான துரை வைகோ:


எனக்கு தமிழக அமைச்சராகும் ஆசையெல்லாம் கிடையாது. நம் கட்சியினர் அப்படி பேசுவதால், நான் சொல்லிக் கொடுத்து இப்படி பேசுவதாக நினைப்பர். இனி, இப்படி பேசாதீர்கள்; தற்போதைய அரசியல் சூழலுக்கும் இது நல்லதல்ல.

டவுட் தனபாலு:


அது சரி... 'ம.தி.மு.க.,வை வலிமைப்படுத்தி, முதல்வராகணும் என்ற நினைப்பில் இருக்கிற என்னை சாதாரண அமைச்சராக்க பார்க்கிறாங்களே'ன்னு நினைக்கிறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us