PUBLISHED ON : டிச 07, 2024 12:00 AM

பா.ம.க., பிரமுகரும், சினிமா இயக்குனருமான தங்கர்பச்சான்:சாத்தனுார் அணையில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்ததால்,இந்த நிலை ஏற்பட்டது. 2015ல் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்து விடப்பட்டதாக அப்போதைய ஆட்சி மீது, தி.மு.க., குற்றச்சாட்டு வைத்தது; அதையே தான்தற்போது, தி.மு.க., அரசும் செய்து உள்ளது. 2021ல் தென்பெண்ணை ஆற்றங்கரையை பலப்படுத்த, 135 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் வாயிலாக கரையில் மணல் கொட்டினால் போதுமா? மக்கள் வரிப்பணத்தைஏமாற்றுபவர்களும் கொலைகாரர்கள் தான்.
டவுட் தனபாலு: தென்பெண்ணை ஆற்றங்கரையை, 135 கோடி ரூபாயில் பலப்படுத்திஇருந்தால், வெள்ளம் ஏன் ஊருக்குள்ள வந்திருக்க போகுது...?கரையில் மணலை கொட்டிட்டு,கமுக்கமா கோடிகளை சுருட்டிட்டாங்க என்பது, 'டவுட்'டேஇல்லாம தெரியுது!
பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்:கடந்த மூன்று ஆண்டுகளாக, கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு, துாய்மை பணியாளர்களை நியமனம் செய்யாததால், திண்டுக்கல் மாவட்டம், பழனியில்உள்ள அரசு பெண்கள் பள்ளியில்,மாணவியரை கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்துவதாக செய்தி வெளியாகி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
டவுட் தனபாலு: தி.மு.க., அரசின், 'நமக்கு நாமே' என்ற திட்டத்தை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தப்பா புரிஞ்சுக்கிட்டு,மாணவியரை கழிப்பறை கழுவவிட்டுட்டாங்களோ என்ற, 'டவுட்'தான்வருது... இந்த மாதிரி அவலங்கள்அரசு பள்ளிகளில் நடப்பதால் தான், எந்த அமைச்சர்களின் பிள்ளைகளும் அங்க படிக்கிறது இல்லையோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான்: சீமான் யாரோடு பேசுகிறார்;எங்கு போகிறார் என்பதை கண்காணிக்கும் பணியை சிறப்பாக செய்கிறது தமிழக போலீஸ். ஆனால், அதே போலீசால்தமிழகத்தில் நடக்கும் கொலை - கொள்ளை குற்றச் செயல்களை தடுக்க முடியவில்லை.
டவுட் தனபாலு: அதானே... உங்களை நிழல் மாதிரி பின்தொடர்ந்து கண்காணிக்கிறதை விட, பழைய குற்றவாளிகளை கண்கொத்தி பாம்பா கவனிச்சாலே,பல கொலை, கொள்ளைகளை தடுக்க முடியுமே... ஆனா, உங்க மேல ஆட்சியாளர்கள் காட்டும் அக்கறையை சட்டம் - ஒழுங்கு மேல காட்ட மாட்டேங்கிறாங்களோஎன்ற, 'டவுட்'தான் வருது!