/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
போலியோ விழிப்புணர்வுக்காக பீகார் வாலிபர் சைக்கிள் பயணம்
/
போலியோ விழிப்புணர்வுக்காக பீகார் வாலிபர் சைக்கிள் பயணம்
போலியோ விழிப்புணர்வுக்காக பீகார் வாலிபர் சைக்கிள் பயணம்
போலியோ விழிப்புணர்வுக்காக பீகார் வாலிபர் சைக்கிள் பயணம்
ADDED : செப் 26, 2011 11:52 PM

காரைக்குடி : போலியோ விழிப்புணர்வுக்காக, மூன்று சக்கர சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள, பீகார் மாற்றுத் திறனாளி அரவிந்த்குமார் மிஸ்ரா, 36, நேற்று காரைக்குடி வந்தார்.
கடந்த 2008 நவ.,7ல், ஒடிசா மாநிலம் பூரியில், தன்னந்தனியாக மூன்று சக்கர சைக்கிள் பயணத்தைத் துவக்கிய இவர், சத்திஸ்கர், ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி வழியாக, ராமேஸ்வரம் செல்லவுள்ளார்.
பின், அங்கிருந்து மதுரை, கன்னியாகுமரி, கேரளா, கோவா செல்ல திட்டமிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் வந்த அவரை, பன்னீர்செல்வம் எஸ்.பி., வரவேற்றார். காரைக்குடியில், இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் தலைமையில் போலீசார் வரவேற்பு அளித்தனர்.
அரவிந்த்குமார் மிஸ்ரா கூறியதாவது: நான் சிறுவயதாக இருக்கும் போது, போலியோ நோய் தாக்கியதில், என் வலது கால் ஊனமானது. மூன்று சக்கர சைக்கிள் இல்லாமல் என்னால் இடம் பெயர முடியாது. பி.ஏ., பட்டப் படிப்பு முடித்துள்ளேன். ஊனமான என்னை திருமணம் செய்ய, யாரும் முன்வரவில்லை. என்னைப் போல் மற்ற குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படாமல் இருக்கவும், ரத்ததானம் செய்வதை வலியுறுத்தியும், இந்த விழிப்புணர்வு பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளேன். வழிநெடுக ஆங்காங்கே மக்களை சந்தித்து, போலியோ விழிப்புணர்வு குறித்து பேசியும், பிட் நோட்டீஸ் வழங்கியும் வருகிறேன். கடந்த 2000ம் ஆண்டு, இதே போல் சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். தற்போது, மூன்றாவது முறையாக தன்னந்தனியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இவ்வாறு அரவிந்த்குமார் மிஸ்ரா தெரிவித்தார்.