/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பிரதமர் மோடியின் படத்தை சூரிய ஒளியில் வரைந்த இளைஞர்
/
பிரதமர் மோடியின் படத்தை சூரிய ஒளியில் வரைந்த இளைஞர்
பிரதமர் மோடியின் படத்தை சூரிய ஒளியில் வரைந்த இளைஞர்
பிரதமர் மோடியின் படத்தை சூரிய ஒளியில் வரைந்த இளைஞர்
ADDED : செப் 18, 2024 12:26 AM

சிவகாசி : பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்தை சிவகாசியை சேர்ந்த கார்த்திக் 21,சூரிய ஒளியில் வரைந்து அசத்தினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் 21. சூரிய ஒளி மற்றும் லென்ஸ் மூலமாக பிரபலங்களின் ஓவியங்களை வரைபவர். பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவத்தை சூரிய ஒளியினால் ரப்பர் மரப்பலகையில் தத்ரூபமாக வரைந்தார்.
கார்த்திக் கூறியது: ரப்பர் பலகையில் லென்ஸ் மூலம் சூரிய ஒளியை விழ வைத்து படத்தை வரைந்தேன். இதற்காக சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும் நேரமான காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை என தினமும் நான்கு மணி நேரம் என மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டேன். இந்த உருவப்படத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்றார்.