/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
அண்ணாமலைக்கு ஆதரவாக அமெரிக்க வங்கி இயக்குனர் கோவையில் பிரசாரம்
/
அண்ணாமலைக்கு ஆதரவாக அமெரிக்க வங்கி இயக்குனர் கோவையில் பிரசாரம்
அண்ணாமலைக்கு ஆதரவாக அமெரிக்க வங்கி இயக்குனர் கோவையில் பிரசாரம்
அண்ணாமலைக்கு ஆதரவாக அமெரிக்க வங்கி இயக்குனர் கோவையில் பிரசாரம்
UPDATED : ஏப் 18, 2024 06:09 AM
ADDED : ஏப் 18, 2024 05:04 AM

கோவை: அமெரிக்காவில் வங்கி அதிகாரியாக இருக்கும், கோவையை பூர்வீகமாக கொண்டவர், பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வாகவும், கோவை தொகுதி பா.ஜ.,வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெறவும், பிரசாரம் செய்தார்.
கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டது, முதல் கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் பிரசாரம் செய்துவந்தனர்.
அதே சமயம் அவருக்கு பக்க பலமாக, இளம் தலைமுறையினரும் வீடு வீடாக சென்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கி, பா.ஜ.,வுக்கு ஓட்டு சேகரித்தனர்.
அமெரிக்காவில் வங்கி ஒன்றில் இணை இயக்குனராக பணிபுரியும் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சஞ்சித்குமார் என்பவர், பிரதமர் மோடி, அண்ணாமலைக்காகவே இங்கு வந்து கடந்த, 10 நாட்கள் மக்களை சந்தித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்துள்ளார்.
அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...
நான் அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்றில், இணை இயக்குனராக பணிபுரிகிறேன். பிரதமர் மோடி மீதோ, அவரது அமைச்சர்கள் மீதோ எந்த குற்றச்சாட்டும் இல்லை. அப்படி குற்றச்சாட்டு வைப்பவர்களால், நிரூபிக்கவும் முடியவில்லை.
மோடிக்காக, 2019ம் ஆண்டே கோவை வந்து பா.ஜ.,வுக்காக பிரசாரம் செய்தேன். இந்த முறை அண்ணாமலை கோவையில் நிற்பது தெரிந்தபோது, ரெட்டிப்பு சந்தோஷம். மோடி ஆட்சியில், 'ஜல் ஜீவன்' திட்டத்தில், தண்ணீர் கிடைக்காத கிராமங்களுக்கும் தண்ணீர் செல்கிறது.
துாய்மை பாரதம் திட்டத்தால், சுகாதாரம் சிறக்கிறது. பணம் இல்லாதவர்களை துாக்கிவிட 'முத்ரா' கடன்... என சொல்லிக்கொண்டே போகலாம். காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை துணிந்து ரத்து செய்தது, ராமர் கோவில் கட்டியது என மோடி மீது மதிப்பை மேலும் கூட்டியுள்ளது.
எனவே, இரண்டாவது முறையாக அமெரிக்காவில் இருந்து இங்கு வந்து, பா.ஜ.,வுக்காக பிரசாரம் செய்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

