/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பள்ளிக்கு இரண்டு ஏக்கர் இடத்தை தானமாக வழங்கிய தம்பதி
/
பள்ளிக்கு இரண்டு ஏக்கர் இடத்தை தானமாக வழங்கிய தம்பதி
பள்ளிக்கு இரண்டு ஏக்கர் இடத்தை தானமாக வழங்கிய தம்பதி
பள்ளிக்கு இரண்டு ஏக்கர் இடத்தை தானமாக வழங்கிய தம்பதி
ADDED : பிப் 27, 2025 01:39 AM

மேலூர்; கீழையூரில்  உயர்நிலைப் பள்ளி கட்டுவதற்கு இரண்டு ஏக்கர் இடத்தை தம்பதியினர் தானமாக வழங்கினர்.
கீழையூரில் நுாற்றாண்டு பழமையான கட்டடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. போதிய வகுப்பறைகள் இல்லாமல் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
புதிய பள்ளி கட்டித் தருமாறு மக்கள் வலியுறுத்தினர். கிராமத்திற்கு வெளியே 4 கி.மீ.,  தொலைவில் உள்ள இடத்தில் பள்ளி கட்ட கல்வித்துறை முன்வந்தது. ஆனால் கிராமத்திலிருந்து நீண்ட தொலைவு இருப்பதால் மாணவிகள் பள்ளி சென்றுவர போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால் கிராம மக்கள் தயங்கினர். அதை ஊரைச் சேர்ந்த கிரானைட் குவாரி மற்றும் உணவகம் நடத்தி வரும் கோபாலகிருஷ்ணன் மனைவி தமிழ்ச்செல்விக்கு மேலூர் - - திருப்பத்தூர் மெயின் ரோட்டில் கிராமத்தின் மையப் பகுதியில் நிலம் இருந்தது.
பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட தனது இரண்டு ஏக்கர் இடத்தை தானமாக கொடுக்க முன் வந்தார்.
உடனடியாக பதிவு செய்து கொடுத்தால் பள்ளி கட்டுவதாக கல்வித்துறை கூறியதை தொடர்ந்து நேற்று தம்பதிகள் மேலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பள்ளிக்கு இடத்தை தானமாக பதிவு செய்து கொடுத்தனர். தம்பதியை கிராம மக்கள் பாராட்டினர்.

