/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
திண்டுக்கல்லில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

UPDATED : மே 22, 2024 12:31 PM
ADDED : மே 22, 2024 07:34 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் சக்தி சந்தான கணேசர் கோயிலில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சிக்கு அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர்.
திண்டுக்கல் நகர் ரவுண்ட் ரோடு புதுாரில் அமைந்துள்ளது சக்தி சந்தான கணேசர் கோயில். பல நுாறு ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் முதலில் விநாயகர் மட்டுமே இருந்தார். 2023ல் கோயில் புதுப்பிக்கப்பட்டு பரமேஸ்வரி, பரமேஸ்வரர், விஷ்ணு, துர்க்கை, தட்சணாமூர்த்தி, லிங்கோத் பவர், சண்டிகேஸ்வரர், காலபைரவர் ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. இந்தாண்டு நேற்று வருடாபிேஷகம் நடந்தது.
வருடாபிேஷக அழைப்பிதழ் கோயில் நிர்வாகத்தின் சார்பில் இஸ்லாமியர்களுக்கும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பரமேஸ்வரி பரமேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் மணமகள் வீட்டாராக பங்கேற்று சீர்வரிசைகள் கொண்டு வந்தனர். பூமாலை, வளையல், பட்டுச்சேலை, பழங்கள் உட்பட 21 வகை சீர்வரிசையை அளித்தனர். சிவாச்சாரியார்களால் திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்களது தாலி கயிறுகளை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவர் தனபால் தலைமையில் ஊர் நிர்வாகிகள் செய்திருந்தனர். ரவுண்ட் ரோடு புதுார் ஜூம்மா மஜித் பள்ளிவாசல் தலைவர் இஸ்மாயில், செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் முகமது ஹவுஸ், கவுன்சிலர் முகமது சித்திக் பங்கேற்றனர்.