/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
திரவ நைட்ரஜன் பான்மசாலாவால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்
/
திரவ நைட்ரஜன் பான்மசாலாவால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்
திரவ நைட்ரஜன் பான்மசாலாவால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்
திரவ நைட்ரஜன் பான்மசாலாவால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்
UPDATED : மே 23, 2024 08:21 AM
ADDED : மே 23, 2024 01:20 AM

பெங்களூரு, கர்நாடகாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் திரவ நைட்ரஜன் அடங்கிய பான் மசாலா சாப்பிட்ட 12 வயது சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
வட மாநிலங்களை போலவே தென் மாநிலங்களிலும், 'ஐஸ் பான்' முதல் 'பயர் பான்' வரை பல வகையான பீடாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் புது வரவாக, 'ஸ்மோக் பான்' வகை பீடாக்கள் விருந்துகளில் பரிமாறப்படுகின்றன.
சாப்பிட்ட உடன் வாயில் புகையை ஏற்படுத்தும் இந்த வகை ஸ்மோக் பான்களை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் விரும்பி சாப்பிடுகின்றனர். அவ்வாறு வழங்கப்பட்ட ஸ்மோக் பான், கர்நாடகாவில் 12 வயது சிறுமியின் வயிற்றில் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பான் பீடா வழங்கப்பட, அதை அங்குள்ள பலர் ஆர்வமுடன் சுவைத்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 வயது சிறுமியும் ஆசையுடன் அதை வாயில் போட்டு மெல்ல, அடுத்த நிமிடமே அவர் வாயில் இருந்து புகை வந்தது.
இந்த ஆனந்தத்தை அனுபவித்த அடுத்த சில நிமிடங்களில், வயிற்றை பிடித்துக் கொண்டு அந்த சிறுமி சரிந்து விழுந்தாள். பதறியடித்த பெற்றோர், சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஸ்மோக் பான் சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மருத்துவத்தில், 'பெர்போரேஷன் பெரிட்டோனிட்டிஸ்' என கூறப்படுகிறது.
வயிற்றில் ஏற்பட்ட துளை விரிவடைவதை தடுக்க, உடனடியாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்படி, சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதியில் 4க்கு 5 செ.மீ., அளவு அகற்றப்பட்டது.
தீவிர சிகிச்சைக்குப் பின் சிறுமி நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஸ்மோக் பானில் இருந்த திரவ நைட்ரஜனில் இருந்த ஆவியாகும் ரசாயனமே இதற்கு காரணம் எனக் கூறிய அவர்கள், இந்த நீராவிகளை உள்ளிழுப்பதால் சுவாசப் பிரச்னை ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.

