/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மனைவிக்காக ரூ.1 கோடியில் மணிமண்டபம் கட்டிய கணவர்
/
மனைவிக்காக ரூ.1 கோடியில் மணிமண்டபம் கட்டிய கணவர்
ADDED : ஆக 12, 2024 12:31 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியூரில் இறந்த காதல் மனைவி விஜயாவின் நினைவாக கணவர் கோட்டை முத்து ரூ.1 கோடியில் மணிமண்டபம் கட்டியுள்ளார்.
திருவாடானை அருகே கட்டுகுடி கிராமத்தை சேர்ந்தவர் கோட்டைமுத்து 75. சென்னை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வேலைபார்த்தார். இவருக்கும் சென்னையை சேர்ந்த விஜயாவிற்கும் குடும்பத்தினர் சம்மத்துடன் 1974 ல் காதல் திருமணம் நடந்தது. இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
2020 மே 15 ல் விஜயா இறந்தார். அவருக்கு மணிமண்டபம் கட்ட கணவர், குடும்பத்தினர் முடிவு செய்து திருவாடானை அருகே ஆதியூரில் விஜயா உருவம் கொண்ட வெண்கலசிலையுடன் மணிமண்டபம் கட்டியுள்ளனர். நேற்று திறப்பு விழா நடந்தது. அன்னதானம் வழங்கினர். ஊர்மக்கள் பங்கேற்றனர்.
கோட்டைமுத்து கூறுகையில் '' எங்கள் குடும்பத்தினரை அன்பும், பண்பும், பாசத்தோடு வளர்த்து ஆளாக்கிய எங்கள் இதய தெய்வத்திற்கு நாங்கள் அவருக்கு செலுத்தும் மரியாதையின் நினைவாக ரூ.1 கோடியில் மணிமண்டபம் கட்டியுள்ளோம் என்றார்.