/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
வினேஷ் போகத் உருவத்தை சூரிய ஒளியில் வரைந்த இளைஞர்
/
வினேஷ் போகத் உருவத்தை சூரிய ஒளியில் வரைந்த இளைஞர்
UPDATED : ஆக 11, 2024 12:53 PM
ADDED : ஆக 11, 2024 06:36 AM

சிவகாசி: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 100 கிராம் எடை சர்ச்சையால் பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத்திற்கு உருவத்தை விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சூரிய ஒளியில் வரைந்து அசத்தினார்.
திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் 21. பட்டதாரி இளைஞர் ஆன இவர் இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர்.
சூரிய ஒளி, கண்ணாடி லென்ஸ் மூலமாக சினிமா நடிகர்கள், தலைவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களின் ஓவியங்களை வரைந்து வருகிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 100 கிராம் எடை சர்ச்சையினால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது உருவத்தை ரப்பர் பலகையில் சூரிய ஒளியை செலுத்தி புதுவகை ஓவியமாக வரைந்தார்.
கார்த்திக் கூறுகையில், புதுமையான ஓவியமாக லென்ஸ் வழியாக ரப்பர் பலகையில் சூரிய ஒளியை விழ வைத்து படத்தை வரைந்தேன் என்றார்.

