தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/சாலையில் கிடந்த 20 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்

சாலையில் கிடந்த 20 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்

சாலையில் கிடந்த 20 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்


ADDED : பிப் 09, 2026 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 01:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாரூர்: சென்னை, கூடுவாஞ்சேரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் - முத்துலட்சுமி தம்பதி, குடும்பத்தினருடன், நேற்று காலை, திருவாரூர், விருப்பாட்சி நடப்பு தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்து, ஆலத்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல, ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் வைத்திருந்த பை, ஆட்டோவில் இருந்து வழியில் தவறி விழுந்து விட்டது.

இந்நிலையில், துாய்மை பணியாளர் துரை என்பவர், விருப்பாட்சி நடப்பு சாலையில் கிடந்த பையை எடுத்து, போலீசில் ஒப்படைத்தார். அதில் இருந்த, 20 சவரன் நகை, வெள்ளி பொருட்களை, ராதாகிருஷ்ணனிடம், இன்ஸ்பெக்டர் சந்தானமேரி ஒப்படைத்தார். துாய்மை பணியாளர் துரையின் நேர்மையை, போலீசார், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

அதேபோல, திருப்பூர் மாவட்டம், உகாயனுாரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; சலவைத் தொழிலாளி. அவரிடம், இஸ்திரி செய்ய வழங்கப்பட்ட சேலையில் இருந்த, 5 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us