/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
திருவனந்தபுரம்-கார்கில் 4500 கி.மீ., துாரம்; விமானப்படை வீரர்கள் சைக்கிள் பயணம்

UPDATED : பிப் 07, 2026 06:45 AM
ADDED : பிப் 07, 2026 05:53 AM

ராமேஸ்வரம்: சைக்கிள் சவாரி, உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி இந்திய விமானப்படை வீரர்கள் திருவனந்தபுரம் முதல் கார்கில் வரை 4500 கி.மீ., துாரம் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சாலை பாதுகாப்பு மற்றும் சைக்கிளில் சவாரி செய்வதால் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி பிப்.,3ல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய விமானப்படை குரூப் கமாண்டர் சந்திரசேகர் தலைமையில் 5 அதிகாரிகள் உள்ளிட்ட 16 வீரர்கள் சைக்கிள் பயணத்தை துவக்கினர்.
கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி வழியாக நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இன்று (பிப்.,7) ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை, திருச்சி, பெங்களூர், ஹைதராபாத், மும்பை வழியாக டில்லி செல்ல உள்ளனர்.
பிப்., இறுதிக்குள் டில்லி செல்லும் வீரர்கள் தினமும் 100 கி.மீ., வீதம் 4,500 கி.மீ., சைக்கிளில் பயணித்து அக்.,ல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கிலுக்கு செல்ல உள்ளனர்.