/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு படைத்த மூதாட்டி
/
கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு படைத்த மூதாட்டி
கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு படைத்த மூதாட்டி
கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு படைத்த மூதாட்டி
ADDED : மார் 10, 2024 12:05 AM

ஸ்ரீவில்லிபுத்துார் :விருதுநகர் மாவட்டம், முதலியார்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில் கொதிக்கும் நெய்யில், 90 வயது மூதாட்டி முத்தம்மாள் கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்தார்.
இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சிவராத்திரி விழா துவங்கியது. அப்போது அம்மனை வணங்கி விறகு அடுப்பில் நெய்யை ஊற்றி கொதிக்கவிட்டு வெல்லம், அரிசி மாவு கலந்த அப்ப உருண்டையை மிதக்க விட்டார்.
எண்ணெய்யில் வெந்த அப்ப உருண்டைகளை, கரண்டியை பயன்படுத்தாமல் முத்தம்மாள் வெறும் கையால் எடுத்து பனை ஓலை பெட்டியில் சேகரித்தார். கோவில் பூஜாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மேல், அம்மனுக்கு அப்பங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து பிரசாதத்தை பெற்றனர்.