sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

காளைக்காக ரூ.30 லட்சத்தில் பஸ் அயோத்தி செல்ல அர்ச்சகர் ஏற்பாடு

/

காளைக்காக ரூ.30 லட்சத்தில் பஸ் அயோத்தி செல்ல அர்ச்சகர் ஏற்பாடு

காளைக்காக ரூ.30 லட்சத்தில் பஸ் அயோத்தி செல்ல அர்ச்சகர் ஏற்பாடு

காளைக்காக ரூ.30 லட்சத்தில் பஸ் அயோத்தி செல்ல அர்ச்சகர் ஏற்பாடு

1


ADDED : செப் 22, 2024 01:26 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:கர்நாடகாவைச் சேர்ந்த கோவில் அர்ச்சகர் ஒருவர், அயோத்திக்கு தன்னுடன் காளை மாட்டை அழைத்துச் செல்ல, 30 லட்சம் ரூபாய் செலவில் பஸ்சை தயார் செய்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு தொட்டபல்லாபூரின் பெரமகொண்டனஹள்ளியின் திண்ணே ஆஞ்சநேய சுவாமி கோவிலில் அர்ச்சகர் வாசுதேவாச்சார்யா.

தீவிர ராம பக்தர். இவர், ஒன்றரை ஆண்டு களுக்கு முன், ஒரு காளை மாடு வாங்கினார். அதற்கு ஹனுமன் என பெயரிட்டுள்ளார்.

காளை மாடு வாங்கிய ஓராண்டில், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில், காளையை, அயோத்திக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

நீண்ட துாரம் பயணம் என்பதால், சரக்கு வாகனத்தில் அனுப்ப முடியாது. இதற்காக, தன் சொந்த பணத்தில் 30 லட்சம் ரூபாய் செலவழித்து, ஒரு பஸ்சை வடிவமைத்துள்ளார். இந்த பஸ்சில் காளை துாங்குவதற்கும், சாப்பிடவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, வாசுதேவாச்சார்யா கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு காளையை அழைத்துச் செல்வது எளிதான காரியம் அல்ல. காளையை அழைத்துச் செல்ல, 30 லட்சம் ரூபாயில் ஒரு பஸ் தயார் செய்யப்பட்டு உள்ளது.

இந்த பஸ்சின் ஒரு பகுதியில், காளைக்கு தேவையான தீவனம், தண்ணீர், படுத்து உறங்க மெத்தை தயார்படுத்தி உள்ளேன். நான் உட்பட ஆறு பேர் காளையுடன் செல்கிறோம். இந்த பயணம், 18 நாட்கள் நீடிக்கும்.

முதலில் மந்த்ராலயத்தில் ராகவேந்திரரை தரிசித்து, யாத்திரையை துவக்குகிறோம். அதை தொடர்ந்து அயோத்தியில் பாலராமர் தரிசனம்; பின் காசியில் உள்ள சாலி கிராமத்துக்கு செல்வோம்.

ஏற்கனவே, கேரளா, தமிழகத்துக்கு சுப நிகழ்ச்சிகளுக்காக காளையுடன் சென்று உள்ளேன். கிரஹப்பிரவேசம், சத்யநாராயண பூஜை உட்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, வாகனத்தில் சென்ற அனுபவம் காளைக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us