தி.மு.க., ஒரு தீயசக்தி.. அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் அவதுாறு வீடியோ வைரல்
தி.மு.க., ஒரு தீயசக்தி.. அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் அவதுாறு வீடியோ வைரல்
ADDED : அக் 15, 2026 05:36 AM

கடலுார்: புதுச்சேரியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ்சின் வழித்தட டிஜிட்டல் பலகையில் 'தி.மு.க., ஒரு தீயசக்தி' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது சமூக வலை தளங்களில் வைரலானது.
புதுச்சேரியில் இருந்து கடலுார், நெய்வேலி, விருத்தாசலம், பெரம்பலுார் வழியாக திருச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சின் பின் பகுதியில் உள்ள வழித்தட டிஜிட்டல் பலகையில் 'ஓம்சக்தி; பாரசக்தி; தி.மு.க., ஒரு தீயசக்தி; கொளத்துார் கொத்து பரோட்டா; ஸ்டாலின் அங்கிள்' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள், வாசகம் இடம் பெற்றிருந்ததை வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர்.
இதுகுறித்து கடலுார் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி கூறுகையில், 'விருத்தாசலத்தில் இருந்து திருச்சி அருகில் பஸ் செல்லும் போது, வழித்தட டிஜிட்டல் பலகையில் ஒயர் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர், அவதுாறு வாசகங்களை இடம் பெறச் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்
