தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ மீன் உருவ சுடுமண் அச்சு கீழடியில் கண்டெடுப்பு

 மீன் உருவ சுடுமண் அச்சு கீழடியில் கண்டெடுப்பு

 மீன் உருவ சுடுமண் அச்சு கீழடியில் கண்டெடுப்பு


ADDED : ஆக 20, 2026 09:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 09:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சிவகங்கை மாவட்டம், கீழடியில், கடந்த மார்ச் முதல், 11ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடக்கின்றன. தற்போது வரை, 13 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அவற்றில், 1,300க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீன் உருவ சுடுமண் அச்சு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கீழடி அகழாய்வு இயக்குநர் ரமேஷ் கூறுகையில், ''பாண்டியர்களின் தலைநகரான மதுரைக்கு அருகில், வைகை நதிக்கரையில் உள்ள கீழடியில், பாண்டியர்களின் அரச சின்னமான மீன் உருவம் பொறித்த, சுடுமண் அச்சு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி அல்லது இறக்குமதி பொருட்களின் மீது, ஒரே மாதிரியான முத்திரையை பயன்படுத்த, இது பயன்பட்டிருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us