/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை
/
உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை
UPDATED : மே 01, 2024 08:40 AM
ADDED : மே 01, 2024 07:30 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே நடந்த விபத்தில் மூளைச் சாவு அடைந்து உறுப்புகளை தானம் செய்த பெண்ணின் உடலுக்கு திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திண்டுக்கல் கள்ளிமந்தையம் ஒத்தையூரைச் சேர்ந்தவர் விவசாயி மயில்சாமி 55 ,மனைவி தமிழ்செல்வியுடன் டூவீலரில் ஏப்.28ல் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் சென்றார்.
கொசவபட்டி அருகே சென்ற போது அரசு பஸ் மோதியது. காயமடைந்த இருவரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மயில்சாமி இறந்த நிலையில் மூளை சாவு அடைந்த தமிழ்ச்செல்வியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் எரிவாயு மயானத்திற்கு கொண்டுவரப்பட்ட தமிழ்ச்செல்வியின் உடலுக்கு திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பழநி ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் சசி, அஞ்சலி செலுத்தினர். இந்த தம்பதிக்கு திருமணம் ஆன மூன்று மகள்களும், திருமணமாகாத ஒரு மகனும் உள்ளனர்.