/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
70 ஆண்டாக இணைந்து வாழ்ந்த மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிரும் பிரிந்தது

ADDED : டிச 30, 2024 06:11 AM

வீரபாண்டி: சேலம், வீரபாண்டி முன்சீப் தோட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., பெரியசாமி, 94, ஊராட்சி முன்னாள் தலைவர்.
இவரது மனைவி ஜெகதாம்பாள், 87. இவர்களுக்கு மதிவாணன், 62, திரவியம், 60, என இரு மகன்கள் உள்ளனர். விவசாயம் செய்கின்றனர். மகன்கள் வழியில், மூன்று பேரன், பேத்திகள், ஐந்து கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர்.
வயது முதிர்வால், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ஜெகதாம்பாள் இறந்தார். அவரை அடக்கம் செய்யும் பணியில், மகன்கள், உறவினர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், 70 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த மனைவியின் இறப்பை தாங்க முடியாமல், சோகத்தில் இருந்த பெரியசாமி, நேற்று காலை, 7:00 மணிக்கு உயிரிழந்தார்.
தம்பதியர், இறப்பிலும் பிரியாமல் ஒன்றாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.