/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தாடியை 'சேவ்' செய்ய கணவர் மறுப்பு; மைத்துனருடன் ஓடிப்போன மனைவி
/
தாடியை 'சேவ்' செய்ய கணவர் மறுப்பு; மைத்துனருடன் ஓடிப்போன மனைவி
தாடியை 'சேவ்' செய்ய கணவர் மறுப்பு; மைத்துனருடன் ஓடிப்போன மனைவி
தாடியை 'சேவ்' செய்ய கணவர் மறுப்பு; மைத்துனருடன் ஓடிப்போன மனைவி
ADDED : மே 02, 2025 06:20 AM

மீரட்: உத்தர பிரதேசத்தில், தாடியை 'க்ளீன் சேவ்' செய்ய கணவர் மறுத்ததால் அதிருப்தி அடைந்த மனைவி, மைத்துனருடன் ஓடிப்போன சம்பவம் நடந்துள்ளது.
உ.பி.,யின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜாகிர் என்பவருக்கும், அர்ஷி என்பவருக்கும் ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. முகமது ஜாகிர் அதிகளவு தாடி வளர்த்திருந்தார். அதை 'க்ளீன் சேவ்' செய்யும்படி அர்ஷி பலமுறை வலியுறுத்தினார். ஆனால் இதை முகமது ஜாஹிர் ஏற்கவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதற்கிடையே முகமது ஜாஹிர் சகோதரர் ஷபிருடன், அர்ஷிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது, காதலாக மாறியது. தாடி வளர்க்க விரும்பாத ஷபிர் 'ட்ரிம்' செய்து பராமரித்து வந்தார். கடந்த பிப்ரவரியில் ஷபிருடன் அர்ஷி ஓடிப் போனதாகக் கூறப்படுகிறது.
மூன்று மாதங்களாகியும் மனைவி வீட்டுக்கு வராததை அடுத்து போலீசில் முகமது ஜாஹிர் புகார் அளித்தார். அதில் 'நான் தாடி வளர்ப்பது அர்ஷிக்கு பிடிக்கவில்லை. என் சகோதரர் ஷபிருடன் அவர் ஓடிவிட்டார். என்னை கொல்ல அவர்கள் சதித்திட்டம் போட்டுள்ளனர்' என முகமது ஜாஹிர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கிடையே பெற்றோர் வீட்டுக்கு ஷபிருடன் அர்ஷி சமீபத்தில் வந்தார். இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அர்ஷியின் பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
'முகமது ஜாஹிருடன் வாழ விருப்பமில்லை. தாடி தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை. அவர் பாலியல் ரீதியாக தகுதியற்றவர். ஷபிருடன் வாழ விரும்புகிறேன்' என போலீசாரிடம் அர்ஷி கூறினார். இதைக் கேட்டு மனமுடைந்த முகமது ஜாஹிர் போலீசார் முன்னிலையில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.