sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

 'கமகம' பிரியாணி, அறுசுவை உணவு சாப்பிடுவதற்காக தான் போராட்டமா?

/

 'கமகம' பிரியாணி, அறுசுவை உணவு சாப்பிடுவதற்காக தான் போராட்டமா?

 'கமகம' பிரியாணி, அறுசுவை உணவு சாப்பிடுவதற்காக தான் போராட்டமா?

 'கமகம' பிரியாணி, அறுசுவை உணவு சாப்பிடுவதற்காக தான் போராட்டமா?


ADDED : மார் 03, 2026 12:34 AM

Google News

ADDED : மார் 03, 2026 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்: வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும், பிப்., 24 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், எந்த சான்றிதழும் பெற முடியாமல் பொதுமக்கள், விவசாயிகள் தவிக்கின்றனர்.

நாகை மாவட்டத்தில், நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்திற்குட்பட்ட, 511 பேர், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில், சாமியானா பந்தல் அமைத்து, தினமும் 250க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள், தேநீர், வடை, மதியம் சாம்பார், வத்தல் குழம்பு, ரசம், காய்கறி கூட்டுடன் அறுசுவை உணவு தயாரித்து, அங்கேயே சாப்பிடுகின்றனர். மாலை தேநீருடன் விடை பெற்று செல்கின்றனர். ஏழாவது நாள் போராட்டமான நேற்று மதியம், 'வெஜிடெபிள் பிரியாணி' தயாரித்தனர்.

வருவாய்துறை அலுவலர்கள் கூறுகையில், 'செலவினங்களை குறைக்க பாத்திரங்களை வாடகைக்கு எடுத்து, நாங்களே சமைத்து வருகிறோம்' என்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் என்பதால், மனு அளிக்க வந்த ஏராளமான பொதுமக்கள், பிரியாணி வாசனையால் முகம் சுளித்தனர்.

விவசாயிகள் கூறுகையில், 'இந்த ஆண்டு கடும் போராட்டத்திற்கு பின் சம்பா அறுவடை நடந்தாலும், வி.ஏ.ஓ.,விடம் சிட்டா, அடங்கல் பெற்றால் தான், நெல்லை விற்பனை செய்ய முடியும். அனைவரும் ஸ்டிரைக் என்று இங்கு கொண்டாட்டத்தில் உள்ளனர். 'நெல்லை வைத்துக்கொண்டு விற்பனை செய்ய முடியாமல் நாங்கள் திண்டாட்டத்தில் இருக்கிறோம்' என்றனர்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளோடு ஒன்றிணைந்த வருவாய் துறையினர் போராட்டத்தால், பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.






      Dinamalar
      Follow us